பெண்குயின் டீசர்.. கீர்த்தி சுரேஷுக்கு கைகொடுக்கும்.. முன்னணி நடிகைகள்!

சென்னை : பெண்குயின் படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் கீர்த்தி சுரேஷிற்காக கை கொடுக்க 4 முன்னணி நடிகைகள் முன்வந்துள்ளனர்.

Recommended Video

Penguin Official Teaser | Keerthy Suresh | Amazon Prime | Breakdown

சமகாலத்தில் நடிக்கும் சக நடிகைகளை தனது போட்டியாளர்களாக பாவித்து வரும் நிலையில் இந்த நட்பு பார்க்கும் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

மேலும் பெண் குயின் படத்தின் டீசரை 4 முன்னணி நடிகைகளின் முன்னிலையில் அவர்களின் சமூக வலைதளங்களின் வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது.

பெண்குயின்

பெண்குயின்

கீர்த்தி சுரேஷின் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் பெண் குயின் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி சக்கைப்போடு போட்டு வந்த நிலையில் இப்போது அதன் டீசர் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளை தாண்டி இன்று பெண் குயின் படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷிற்காக நான்கு முன்னணி ஹீரோயின்கள் கை கொடுத்துள்ளனர்.

 ஒன்றாக சேர்ந்து

ஒன்றாக சேர்ந்து

இந்த டீசரை வெளியிட நடிகைகள் டாப்ஸி, திரிஷா, சமந்தா மற்றும் மஞ்சு வாரியர் போன்றோர் அவர்களது சமூக வலைத்தளங்களில் வாயிலாக பெண் குயின் படத்தின் டீசரை இன்று வெளியிடுகின்றனர். சமகாலத்தில் நடிக்கும் நடிகைகளை போட்டியாளர்களாக பார்க்கும் இந்த சூழலில் இப்போது பெண் குயின் படத்தின் டீசரை சமகாலத்தில் இருக்கும் நான்கு நடிகைகள் ஒன்றாக சேர்ந்து வெளியிடுவது இதுவே முதல் ஆகும். இவ்வாறு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் பெண் குயின் திரைப்படத்தின் டீசர் அந்த மொழிகளில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நடிகைகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளனர்.

 வெற்றி கூட்டணி

வெற்றி கூட்டணி

மேலும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது, சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து இந்த படமும் OTTயில் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த படமும் பலத்த எதிர்பார்ப்பை பெற்று வருகிறது.

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

பெண் குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்து வரும் வேளையில் மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. அதைப்பற்றிய விவரங்களை இன்னும் அந்த படக்குழு வெளியிடாத நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை தவிர வேறு யாரெல்லாம் நடித்து இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் பலருக்கும் இருக்கும் நீண்ட நாள் கேள்வியாகும்.

கைகொடுக்கும் ஹீரோயின்கள்

ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண் தான் கை கொடுக்க வேண்டும் என்று இந்த நான்கு அழகான பெண்களும் இந்த படத்திற்காக கை கொடுக்க முன்வந்துள்ள நிலையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் ரசிகர்களிடம் பாராட்டையும் பெற்று வருகிறது. அதேசமயம் சில நாட்களுக்கு முன்பு ஒரு நடிகை மற்றொரு நடிகையை கலாய்த்தும் வீண் வதந்திகளை பரப்பியும் அதற்காக அந்த இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் சண்டைபோட்டு வந்த நிலையில் இப்போது பெண் குயின் படத்திற்காக நான்கு ஹீரோயின்களின் இணைந்துள்ளது அனைவரையும் பாராட்டவும் வியக்கவும் வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X