அட்லீயின் அடுத்த படம்.. 4 ஹீரோக்கள், ஹீரோயின்கள்?.. யார், யார் தெரியுமா?.. செம விஷயம்

சென்னை: அட்லீ இயக்கத்தில் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. தமிழ்நாட்டில் படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதேசமயம் வட மாநிலங்களில் சக்கைப்போடு போட்டு உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக அவர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டில் விஜய்யை வைத்து வரிசையாக படங்கள் செய்த அட்லீ; பீஸ்ட் படத்தில் தோல்வியை சந்தித்தார். அதற்கு பிறகு ஹிந்திக்கு சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். முதன்முறையாக ஹிந்திக்கு அவர் சென்று இயக்கியதன் காரணமாக பெரிய் எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்தது. ஆனால் தமிழ்நாட்டில் படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. மேலும் தன்னுடைய படங்களில் இருந்தே அவர் காப்பி அடித்துவிட்டார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

1000 கோடி ரூபாய் வசூல்: தமிழ்நாட்டில் படம் ஓடவில்லையென்றாலும் வட மாநிலங்களில் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டு 1000 கோடி ரூபாய்வரை படம் வசூலித்தது. ஜவானின் வெற்றியால் பாலிவுட்டில் அட்லீயின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது. அடுத்தடுத்து அவர் ஹிந்தியில் படங்கள் இயக்க கமிட்டாவதாகவும்; ஷாருக்கானுடனும் மீண்டும் இணைந்து பணியாற்றவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

அல்லு அர்ஜுனுடன் படம்: சூழல் இப்படி இருக்க அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ படம் இயக்கப்போவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. முதன்முறையாக அல்லு அர்ஜுனுடன் அவர் இணைந்திருப்பதாலும்; நீண்ட நாட்கள் கழித்து தென் மாநில ஹீரோவுடன் படம் செய்வதாலும் அட்லீ மீது அதீத எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

4 heroines to star in Atlee-Allu Arjun s film here are details
Photo Credit:

ஹாலிவுட் கலைஞர்கள்?: இப்படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், ட்வைன் ஜான்சன் ஆகியோரில் ஒருவரை நடிக்க வைப்பதற்கு படக்குழு திட்டமிட்டிருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அட்லீ - அல்லு அர்ஜுன் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதன்படி இப்படத்தில்அல்லு அர்ஜுன் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும்; நான்கு கேரக்டர்களுமே பாசிட்டிவ் கேரக்டர்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தீபிகா படுகோனே தவிர்த்து மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்துவிட்டார்கள் என்றும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் சைன்ஸ் ஃபிக்‌ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X