4 பேரை காவு வாங்கிய குடிபோதை…இயக்குநரின் மகன் தற்கொலை.. நடிகை விபத்தில் பலி !
சென்னை : புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகைகள் வந்தாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது மதுவாகத்தான் இருக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் மது இல்லாமல் எந்த விழாக்களும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை என்ற முடிவை எடுத்துள்ளனர்.
இளசுகளின் மனநிலை மாறி உள்ளது. ஹோலி பண்டிகையில் அதிகமாக குடித்ததால் இயக்குநரின் மகனும், பிரபல நடிகையும் உயிரிழந்துள்ளனர்

மது விருந்து
கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடித்த ஹோலி பண்டிகை விழாவில் தெலுங்கு டிவி நடிகை காயத்ரி தனது ஆண் நண்பர் ரத்தோட் என்பவருடன் கலந்து கொண்டார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற கொண்டாட்டத்தில் சரக்கு பார்ட்டியும் நடந்துள்ளது. இதில் இருவரும் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளனர்.

அதிவேகமாக சென்ற கார்
பார்ட்டி முடிந்ததும் இருவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ரத்தோட் காரை ஓட்ட நடிகை காயத்ரி அருகில் அமர்ந்து வந்துள்ளார். அவர்கள் சென்ற கார் கச்சிபௌலி அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த டிவைடரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலேயே பலி
இந்த விபத்தால் பலத்த காயமடைந்த நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் ரத்தோட்டை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிவேகமாக சென்ற கார், அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த மகேஷ்வரி என்ற பெண் மீது மோதியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பலரும் இரங்கல்
நடிகை காயத்ரி, 'மேடம் சர் மேடம் அந்தே' என்ற தெலுங்கு வெப் சீரிஸின் மூலம் புகழ் பெற்றார். இவர் தனியாக ஜல்சா ராயுடு என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

4பேர் பலி
இதேபோல பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிரிஷ் மாலிக் மகன் மனன், ஹோலி கொண்டாட்டத்தில் அதிகம் குடித்துள்ளார். இதுகுறித்து அப்பா திட்டியதால், ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கொண்டாட்டம் என்ற அளவுக்கு மீறி குடித்ததால், இயக்குநரின் மகன் மனன், நடிகை காயத்ரி, அவரின் நண்பர் ரத்தோட், ஒன்றுமே அறியாத அப்பாவி பெண் மகேஷ்வரி என 4பேர் உயிரிழந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











