Leo Trailer-லியோ ட்ரெய்லர் எஃபெக்ட்..இப்பவே புக் மை ஷோவில் குவிந்த 4 லட்சம் பேர்..ஒரு வாரத்துக்கு ஹவுஸ்ஃபுல்?

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கும் சூழலில் புக் மை ஷோவில் 4 லட்சம் பேர் படத்தின் டிக்கெட்டை புக் செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியிருப்பதாலும் மீண்டும் அவர் விஜய்யுடன் இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

4 Lakh Fans Interested in Leo Movie at Book My Show After Leo Trailer Release

லியோ ட்ரெய்லர்: படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்ட சூழலில் படத்திலிருந்து வரிசையாக அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதன்படி வெளியான போஸ்டர்கள், இரண்டாவது சிங்கிளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சூழலில் லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று சில நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அறிவித்தபடி இன்று சன் டிவி யூட்யூப் சேனலில் லியோ ட்ரெய்லர் வெளியானது. காலையிலிருந்தே ரசிகர்கள் இந்த ட்ரெய்லருக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். ட்ரெய்லர் வெளியானதும் விஜய் ரசிகர்கள் ஈசல் கூட்டம் போல் சன் டிவி யூட்யூப் சேனலை மொய்த்ததன் காரணமாக ரியல் டைமிலேயே 1 மில்லியன் (10 லட்சம் ) பேர் ட்ரெய்லரை பார்த்தனர்.

கன்ஃபார்ம் ஹிட்டுதான்: ட்ரெய்லரை பார்த்து முடித்த ரசிகர்களுக்கு பரம திருப்தி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு ஸ்டைலிஷ் மேக்கிங்கில் விஜய்யை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் காண்பிப்பார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று இப்போதே அறுதியிட்டு கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

4 Lakh Fans Interested in Leo Movie at Book My Show After Leo Trailer Release

புக் மை ஷோவில் குவிந்த ரசிகர்கள்: லியோ படத்திற்கான ஹைப் ஏற்கனவே இருந்தாலும் அது மேற்கொண்டு ஆடியோ லான்ச்சில் ஏறும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆடியோ லான்ச் நடக்கவில்லை. இருந்தாலும் ட்ரெய்லர் வெளியான பிறகு அந்த ஹைப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ப்ரீ புக்கிங் தொடங்குவதற்கு முன்னதாகவே புக் மை ஷோவில் லியோ படத்தின் டிக்கெட்டை புக் செய்வதற்கு 4 லட்சம் பேர் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.

இதுவரை வேறு எந்த ஒரு படத்துக்கும் இவ்வளவு எண்ணிக்கையில் ரசிகர்கள் ப்ரீ புக்கிங் தொடங்குவதற்கு முன்பு ஆர்வமாக இருந்ததில்லை என கூறப்படுகிறது. எனவே லியோ படம் ப்ரீ புக்கிங்கிலேயே பல சாதனைகளை தகர்த்தெறியும் என்றும் முதல் வாரத்துக்கு புக் மை ஷோவில் படத்திற்கான டிக்கெட் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றும் கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X