twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சக்சேனா மீதான மேலும் 4 மோசடி வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By Shankar
    |

    Hansraj Saxena
    சென்னை: சக்சேனா மீதான மேலும் 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா. இவர் மீது கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சினிமா வினியோகஸ்தர்கள் 2 புகார்களை கொடுத்தனர். இந்த வழக்குகளில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.

    நீதிமன்றத்துக்கு வெளியே புகார்தாரர்களுடன் சமரசமானதை அடுத்து, இந்த 2 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன.

    மேலும் 4 வழக்குகள்

    இந்த நிலையில் முத்துக்குமுத்தாக என்ற படம் தொடர்பாக ராசு மதுரவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசிலும், வல்லக்கோட்டை படம் தொடர்பாக டி.டி.ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசிலும், சிந்தனை செய் படம் தொடர்பாக அருள் மூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் போலீசாரும், மாப்பிள்ளை படம் தொடர்பாக ஹித்தேஷ் ஜபக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோடம்பாக்கம் போலீசாரும் சக்சேனா மீது மோசடி மற்றும் மிரட்டல் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

    மனு ஏற்பு

    நீதிமன்றத்துக்கு வெளியே இந்த பிரச்சினைகள் சம்பந்தமாக புகார்தாரர்களுடன் பேசி, சமரசம் ஏற்படுத்தியுள்ளதால் 4 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்சேனா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். இதுபோன்ற நிலையில் மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. எனவே இந்த வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவித்தார்.

    English summary
    The Madras High court has cancelled 4 more cheating cases on Sun Pictures COO Hansraj Saxena on Monday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X