»   »  இன்று வெளியாகும் படங்கள் சண்டிவீரன், வந்தா மல, செல்வந்தன் மற்றும் குரங்கு கையில பூமாலை- ஒரு பார்வை

இன்று வெளியாகும் படங்கள் சண்டிவீரன், வந்தா மல, செல்வந்தன் மற்றும் குரங்கு கையில பூமாலை- ஒரு பார்வை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வழக்கம் போல 4 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன, வந்தா மல, சண்டிவீரன், குரங்கு கையில பூமாலை மற்றும் செல்வந்தன் ஆகிய 4 படங்களில் செல்வந்தன் தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி இருக்கிறது.

தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் சண்டிவீரன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது, செல்வந்தன் படத்தின் மூலம் தமிழ் பேசவரும் மகேஷ்பாபு தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.


மேலே சொன்ன 2 படங்களுடன் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் வந்தா மல மற்றும் குரங்கு கையில பூமாலை போன்ற திரைப்படங்களும் போட்டியிடுகின்றன.4 படங்களின் பலம், பலவீனம் போன்றவற்றைப் பற்றி இங்கே காணலாம்.


மொத்தம் 5 படங்கள்

மொத்தம் 5 படங்கள்

இன்று மொத்தம் 5 படங்கள் வெளியாகின்றன சண்டிவீரன், வந்தா மல, குரங்கு கையில பூமாலை செல்வந்தன் மற்றும் ஸ்ரீமந்துடு இதில் ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் பதிப்புதான் செல்வந்தன் என்பதால் செல்வந்தன் படத்தைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.


சண்டிவீரன்

சண்டிவீரன்

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் அதர்வா மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் சண்டிவீரன். இயக்குநர் சற்குணம் இயகியிருகும் இப்படத்தை மற்றொரு இயக்குனரான பாலா தயாரித்திருக்கிறார்.


300 திரையரங்குகளில்

300 திரையரங்குகளில்

தமிழ்நாடு முழுவதும் இன்று 300 திரையரங்குகளில் சண்டிவீரன் வெளியாகிறான், தஞ்சை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் எடுக்கப்பட்டிருக்கும், இந்தப் படத்தில் ஒரு சென்சிட்டிவான விஷயத்தைக் கையாண்டு இருப்பதால் படத்தை சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


சண்டிவீரன் வெற்றிவீரனாகுமா?

சண்டிவீரன் வெற்றிவீரனாகுமா?

தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் அதர்வாவிற்கு சண்டிவீரன் கண்டிப்பாக வெற்றியைப் பரிசளிக்கும் என்று கூறுகிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாதது, கிராமத்துக் கதை மற்றும் அதர்வா - ஆனந்தியின் கெமிஸ்ட்ரி படத்தை நிச்சயம் காப்பாற்றும்..எனினும் பொறுத்திருந்து பார்க்கலாம்.


செல்வந்தன்

செல்வந்தன்

முதல்முறையாக மகேஷ்பாபு நேரடியாக செல்வந்தன் படத்தின் மூலம் தமிழ் பேசவருகிறார், ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் மொழிமாற்றம் தான் செல்வந்தன். நாயகியாக சுருதிஹாசன் நடித்திருப்பதால் தமிழ்நாட்டில் படம் தப்பிவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


குறைந்த திரையரங்குகள்

குறைந்த திரையரங்குகள்

மகேஷ்பாபுவை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து செல்வந்தன் படத்தைப் ப்ரோமோஷன் செய்தும் கூட பயனில்லை, டப்பிங் படம் என்று தியேட்டர் அதிபர்கள் எண்ணிய காரணத்தால் தமிழ்நாட்டில் போதிய அளவு திரையரங்குகள் படத்திற்கு கிடைக்கவில்லை.


வந்தா மல

வந்தா மல

புதுமுகங்கள் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் வந்தா மல. பிரசாத், தமிழ், ஹிட்லர், உதயராஜ் மற்றும் பிரியங்கா நடித்து வெளிவந்திருக்கும் வந்தா மல தமிழ்நாடு முழுவதும் சுமார் 160 திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி என்பதை பொறுத்திருந்து காணலாம்.


குரங்கு கையில பூமாலை

குரங்கு கையில பூமாலை

அறிமுக நடிகர் ஜெகதீஷ் நடிகை சாந்தினி( கோலி சோடா ) நடித்து வெளிவந்திருக்கும் குரங்கு கையில பூமாலை திரைப்படம், இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகி இருக்கிறது.தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது கதையும் அதே போன்று வித்தியாசமாக இருக்கிறதா இல்லை அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்களா என்று பொறுத்திருந்து காணலாம்.


Read more about: release, chandiveeran, tamil cinema
English summary
Chandiveeran, Selvandhan, Vandha Mala, Kuranku Kaiyila Poo Maalai - Movies Released Today.
Please Wait while comments are loading...