திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. நடிகர் விஷால் போட்டியில்லை.. களமிறங்கியது இன்னொரு டீம்!
சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுகின்றன.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு, 2 வருடத்துக்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடக்கிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி
இதில் தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுவது தெரிய வந்துள்ளது.

என்.ராமசாமி
இந்த தேர்தலில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் ஒரு அணியும், மறைந்த தயாரிப்பாளர் ராம நாராயணனின் மகன் முரளி என்ற என்.ராமசாமி தலைமையில் ஒரு அணியும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விஷால் அணி சார்பில் இந்த தேர்தலில் யாரும் போட்டியிடுவதில்லை என்று தெரிகிறது.

தயாரிப்பாளர்கள்
இந்த 3 அணிகள்தான் போட்டியிடும் என்று கூறப்பட்ட நிலையில் நான்காவது ஒரு அணி போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. குறைந்த முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் சார்பில் செந்தில் ஆனந்த், கமலக்கண்ணன் சார்பில் ஒரு அணி போடியிட இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மே மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது.

ஊரடங்கு
மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மே 19 ஆம் தேதி. வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் மே 24. ஜூன் 21 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் அறிவிக்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications











