twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான்காண்டு கொண்டாட்டத்தில் மெர்சல் படம்... ரசிகர்கள் உற்சாகம்

    |

    சென்னை : நடிகர் விஜய் 3 வித்தியாசமான கெட்டப்பில் நடித்து கடந்த 2017ல் வெளிவந்த படம் மெர்சல்.

    அட்லியின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    கலர்ஸ் தமிழ் புதிதாக ஆரம்பித்து உள்ள அக்டோபர் மாத அட்டகாசங்கள் ...வெரைட்டியான நிகழ்ச்சிகள்கலர்ஸ் தமிழ் புதிதாக ஆரம்பித்து உள்ள அக்டோபர் மாத அட்டகாசங்கள் ...வெரைட்டியான நிகழ்ச்சிகள்

    இந்நிலையில் இந்தப் படத்தின் நான்காண்டு கொண்டாட்டத்தை படக்குழு மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

    தளபதி விஜய்

    தளபதி விஜய்

    தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வந்தாலும் இவரது கேரியரில் பெஸ்ட் படமாக மெர்சல் படம் உள்ளது. அட்லி இயக்கத்தில் கடந்த 2017 அக்டோபர் 18ல் வெளியான இந்தப் படத்தில் 3 வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார்.

    3 கதாபாத்திரங்கள்

    3 கதாபாத்திரங்கள்

    வெற்றி, மாறன் மற்றும் அவர்களது தந்தை என 3 கதாபாத்திரங்களிலும் சிறப்பான வித்தியாசத்தை காட்டியது படத்தில் இயக்குநர் அட்லியின் வெற்றியாக கொள்ளப்படுகிறது. படத்தில் பல முந்தைய படங்களில் சாயல் காணப்பட்டாலும் சிறப்பான திரைக்கதை மூலம் அவற்றை மறக்கடிக்க செய்திருந்தார் அட்லி.

    அனல்தெறித்த வசனங்கள்

    அனல்தெறித்த வசனங்கள்

    படத்தில் ஆரம்பத்திலேயே 4 பேர் கடத்திக் கொல்லப்படுவதாக காட்சியமைப்பை கொண்டுவந்து படத்தின் சஸ்பென்சை மெயின்டெய்ன் செய்திருந்தார். மேலும் கதாபாத்திரங்களின் வசனங்களும் அனல் தெறித்தன. ரமணகிரி வாசனுடன் இணைந்து இதை சாத்தியப்படுத்தியிருந்தார் அட்லி.

    Recommended Video

    நிறைய தளபதி பட வாய்ப்பு எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டேன் |ACTOR AROUL |V-CONNECT |FILMIBEAT TAMIL
    வித்தியாசமான விஜய்

    வித்தியாசமான விஜய்

    மேலும் ஐந்து ரூபாய் டாக்டர், மேஜிக் கலைஞர் மற்றும் கிராமத்து தலைவர் என விஜய்யை வித்தியாசமாக சிறப்பான கேரக்டர்களுடன் வெளிப்படுத்தியதும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாட முக்கிய காரணமாக அமைந்தது. படத்தில் மக்களுக்கு தேவையான பொது மருத்துவ வசதி, மருத்துவத்துறையின் தொழில்மயம் ஆகியவற்றை கேள்விக்குட்படுத்திய விதத்தில் விஜய்க்கு மட்டுமின்றி அட்லிக்கும் சிறப்பான படமாக மெர்சல் அமைந்தது.

    3 கதாநாயகிகள்

    3 கதாநாயகிகள்

    மேலும் படத்தின் மூன்று கதாநாயகிகளுக்கும் குறிப்பாக நித்யா மேனன் மற்றும் சமந்தா ஆகியோருக்கு நடிப்பதற்கான ஸ்கோப் இருந்தது. தம்பி, ரோஸ்மில்க் வாங்கித்தரேன் வாடா என்று சமந்தா படத்தில் சொல்வது ஜிலீர் ரகம். படத்தின் சிறப்பான ஓட்டத்திற்கு வில்லனாக நடித்திருந்த எஸ்ஜே சூர்யாவும் முக்கிய காரணம்.

    4 ஆண்டு கொண்டாட்டம்

    4 ஆண்டு கொண்டாட்டம்

    மொத்தத்தில் ரசிகர்களை வெகுவாக கொண்டாட வைத்த மெர்சல் படம் வெளியாகி இன்றைய தினம் 4 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையடுத்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்களும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    Mersal movie team celebrates 4th year of the movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X