பொங்கல் வின்னர் வீரமா... ஜில்லாவா..? விஜய்யும், அஜித்தும் நேரடியாக மோதிக்கொண்ட நாள் இது!

By Vignesh Selvaraj

சென்னை : இன்று அஜித்துக்கும், விஜய்க்கும் ஒரு முக்கியமான நாள். இருவரும் தங்களது படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்து நேரடியாக மோதலில் இறங்கினர்.

சிவா இயக்கத்தில் அஜித்தின் 'வீரம்' படமும், நேசன் இயக்கத்தில் விஜய்யின் 'ஜில்லா' படமும் 2014-ம் ஆண்டு இதே ஜனவரி 10-ம் தேதிதான் வெளியாகின.

பொங்கல் ரிலீஸாக ஒரு மாஸ் ஹீரோ படம் வந்தாலே, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களும் ஒன்றாக ரிலீஸ் ஆனால் கேட்கவா வேண்டும்?

அஜித் சிவா கூட்டணி

அஜித் சிவா கூட்டணி

அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விசுவாசம்' படத்தில் நடிக்கிறார். 'வீரம்', 'வேதாளம்', விவேகம்' ஆகிய படங்களுக்குப் பிறகு இது இந்தக் கூட்டணியின் நான்காவது படம். இந்தக் கூட்டணியின் முதல் படமான 'வீரம்' ரிலீஸ் ஆன நாள் இன்று.

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்

ஹீரோவாக அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான படம் 'வீரம்'. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 4 வருடம் ஆகிறது. அதைக் கொண்டாடும் வகையில் #4YearsOfPongalWinnerVeeram என்ற ஹேஸ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அது தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி இருக்கிறது.

விஜய்யின் ஜில்லா

விஜய்யின் ஜில்லா

'வீரம்' படம் விஜய்யின் 'ஜில்லா' படத்தோடு நேரடியாக பாக்ஸ் ஆபிஸில் மோதியது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் #4YearsOfPongalChampJilla என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அஜித்தின் வீரம்

அஜித்தின் வீரம்

விஜய்யின் 'ஜில்லா' படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாட, அஜித்தின் 'வீரம்' படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். தமிழக தியேட்டர்கள் விஜய், அஜித் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. பேனருக்க்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் என போட்டி போட்டு வரவேற்றனர் ரசிகர்கள்.

இரண்டு படங்களுக்கும் வரவேற்பு

இரண்டு படங்களுக்கும் வரவேற்பு

அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட கதையான 'வீரம்' படத்தில் கிராமத்து அண்ணனாக அசத்தினார் அஜித். ஃபேமிலி சென்டிமென்ட் கதையான ஜில்லாவில் செம ஸ்டைலாக கலக்கினார் விஜய்.

தீராத பஞ்சாயத்து

தீராத பஞ்சாயத்து

இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் ஓரளவு நல்ல வசூலைக் கொடுத்தன. இவற்றில் எது அதிக கலெக்‌ஷன் அடித்தது என இரண்டு நடிகர்களின் ரசிகர்களுமே அடித்துக் கொண்டார்கள். அதற்கு அதிகாரப்பூர்வமான ரிசல்ட் எதுவும் வெளிவராததால் இன்றும் அந்தச் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

ஜில்லா மாஷ்-அப்

'ஜில்லா' படத்தின் நான்கு ஆண்டுகள் நிறைவையொட்டி விஜய் ரசிகர்கள் ஜில்லா மாஷ் அப் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தியேட்டரில்

திருச்சி கலையரங்கம் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

கேரள ரசிகர்கள்

கேரளாவில் விஜய்க்கு செம மார்க்கெட் இருக்கிறது. மோகன்லால் ஜில்லா படத்தில் நடித்ததால் இன்னும் அதிகமாக எதிர்பார்பு நிலவியது. பாலக்காடு தியேட்டர் ஒன்றில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பாருங்கள்.

தெறி என்ட்ரி

'ஜில்லா' படத்தில் விஜய்யின் வெறித்தன என்ட்ரிக்கு ரசிகர்கள் டிக்கெட்டுகளைச் சிதறவிட்டனர். சிவனாக மோகன்லாலும், சக்தியாக விஜய்யும் செம கலக்கு கலக்கினார்கள்.

வீரம் கட்-அவுட்

உலக திரையரங்குகளில் உனது #வீரத்தைகண்டு எதிரிகள் மிரண்டு போனநாள் இன்று ! #4yearsOfPongalWinnerVEERAM - Temple City Ajith Fans-Madurai

அஜித் என்ட்ரி

அடிச்சி ஒட விடு எல்லாரையும் ஒரமா...நடந்து வராரு டா எங்க #தல வீரமா.:muscl#4YearsOfPongalWinnerVeeram

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X