டஃப்ன்னா இப்படி இருக்கணும்...இளசுகளை மிரள வைக்கும் 40 பிளஸ் நடிகைகள்
மும்பை : வளரும் நடிகைகள் முதல், டாப் நடிகைகள் வரை கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் லேட்டஸ்டாக சின்னத்திரை நடிகைகளும் இணைந்துள்ளனர். தாராள கவர்ச்சி காட்டுவதில் யாருக்கு முதலிடம் என பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து, அந்த ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்புக்கள் இல்லாத போதும் ஃபோட்டோஷுட் நடத்துவதை பல நடிகைகள் நிறுத்துவதாக தெரியவில்லை. இன்னும் சிலர் வீட்டில் அரைகுறை ஆடையில் இருக்கும் ஃபோட்டோக்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

டஃப் கொடுக்கும் முன்னாள் கனவு கன்னிகள்
பட வாய்ப்புக்களுக்காகவும், பலரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காகவும் இளம் நடிகைகள் தான் இப்படி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்துகிறார்கள் என்றால், புகழின் உச்சியை தொட்டு, கனவு கன்னிகளாக வலம் வந்தவர்களும் கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்தி பலரையும் கிறங்கடித்து வருகின்றனர்.

ஷில்பா – மாதுரி போட்டி
அப்படி ஃபோட்டோஷுட் நடத்துவதில் ஒரு காலத்தில் பாலிவுட் கனவுகன்னிகளான இருந்த ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்ஷித் இடையே கடும் போட்டியே நடந்து வருகிறது எனலாம். 1990 களிலும், 2000 லும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்த இவர்கள், தற்போது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களால் சமூக வலைதளங்களை கிறங்கடித்து வருகின்றனர்.

நான் வானவில்
கட்டியிருப்பது புடவையா தானா அல்லது வேறு ஏதாவது உடையா என பார்ப்பவர்களை வியக்க வைக்கும் வகையில் ஷில்பா ஷெட்டி, பல வண்ணங்கள் கலந்த உடையில் ஸ்டைலான ஃபோட்டோஷுட்டை நடத்தி இருந்தார். இந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதுடன், நான் தனியான வண்ணமில்லை; பல வண்ணங்கள் கலந்த வானவில் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார் ஷில்பா.

ரூ.24,000 க்கு புடவை
இவர் தான் இப்படி என்றால், மாதுரி தீட்ஷித் சிவப்பு நிற வெல்வெட் புடவையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து ஃபோட்டோஷுட் நடத்தி உள்ளார். இதில் அவர் அணிந்திருக்கும் புடவையில் விலை ரூ.24,000 என்பதையும் குறிப்பிட்டுள்ளார் மாதுரி. டிஜிட்டல் பிரிண்டிங் செய்யப்பட்ட 6 கஜம் புடவையில் மாதுரி தீட்ஷித் கொடுத்துள்ள போசை காட்டி, பலரும் வாயடைத்து போய் உள்ளனர்.

மிரண்டு போன இளம் நடிகைகள்
மாதுரி தீட்ஷித், ஷில்பா ஷெட்டி மட்டுமல்ல தமிழில் கனிகா, மலையாளத்தில் நவ்யா நாயர் போன்ற 40 பிளஸ் வயதுடைய நடிகைகள் படு கவர்ச்சியாக ஃபோட்டோஷுட் நடத்தி, லைக்குகளை குவிப்பதை பார்த்து இளம் நடிகைகள் மிரண்டு போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











