40 வயதில் 2வது திருமணத்துக்கு ரெடியான பீஸ்ட் பட நடிகர்.. காதலியுடன் நிச்சயதார்த்தமே நடந்துடுச்சு!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் தனது காதலியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தை பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நடிகர் ஷைன் டாம் சாக்கோ அதன் பின்னர் காதலித்து வந்த தனது காதலியை விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ள நிலையில், சமீபத்தில் அதற்கான முன்னேற்பாடாக நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

40 வயது மலையாள நடிகர்: 1983ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கேரளாவின் திரிசூரில் பிறந்தவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 2011ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கடம்மா படத்தின் மூலம் அறிமுகமானார் ஷைன் டாம் சாக்கோ. சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள், கம்மாட்டிபாடம், பறவ, மாயநதி, இஷ்க், ஆப்பரேஷன் ஜாவா, குரூப், பீஷ்ம பர்வம், பீஸ்ட், குமாரி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
தமிழில் 2 படங்கள்: மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன் கேங்கில் இருந்து கொண்டு வீரராகவன் விஜய்க்கு உதவி செய்யும் காட்சியில் நடித்திருப்பார். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். மேலும், சில தமிழ் படங்களில் அவர் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

2ம் திருமணத்துக்கு ரெடி: ஃபேஷன் மாடலான தனுஜா என்பவரை காதலித்து வந்த ஷைன் டாம் சாக்கோ புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு கண்டிப்பா திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைத்து தனது காதலியை நிச்சயம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
முதல் மனைவியுடன் விவாகரத்து: தபீதா மேத்யூஸ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டு ஒரு அழகான பெண் குழந்தைக்கும் அப்பாவாக இருந்து வந்த ஷைன் டாம் சாக்கோ ஃபேஷன் மாடல் உடன் ஏற்பட்ட காதல் காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்துக் கொண்டதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கள் அடிபட்டன. 8 வயது மகளையும், மனைவியையும் பிரிந்து விட்டு தற்போது 2வது திருமணத்துக்கு தயாராகி விட்டார் ஷைன் டாம் சாக்கோ எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











