ஒரே பாடல் காட்சியில் 400 உடை மாற்றிய ‘ரணம்’ ஹீரோ, ஹீரோயின்
சென்னை: இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே பாடல் காட்சியில் சுமார் 400 உடைகள் மாற்றி நடனம் ஆடி புதிய சாதனை செய்துள்ளனர் 'ரணம்' பட ஹீரோ, ஹீரோயின்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜயசேகரன் இயக்கும் படம் 'ரணம்'. இப்படத்தின் நாயகன் - நாயகியாக ஹர்சன்-பூனம் கவுர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பாடல் காட்சிப் படப்பிடிப்பில், ஹர்சன் - பூனம் கவுர் இருவரும் சுமார் 400 விதமான உடைகளை மாற்றி மாற்றி அணிந்து நடித்துள்ளனராம்.
இது குறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில்...

400 உடை....
‘ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன்-கதாநாயகிக்கு 400 உடைகள் பயன்படுத்தி இருப்பது இதுவே முதல்முறை.

ரோமியோ...என் ரோமியோ
எங்கட போனே ரோமியோ...என்னடா ஆனே ரோமியோ...ரெண்டு நாள் தூங்கலியே ரோமியோ'' என்று தொடங்கும் இந்த பாடல் காட்சி சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

பாடல்கள் சினேகன்....
ஹர்சன்-பூனம் கவுர் ஜோடியுடன் ஷரத், சுவாசிகா, சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘நான் கடவுள்' ராஜேந்திரன், சுப்புராஜ், மற்றும் மலேசிய நடிகர்-நடிகைகள் நடிக்கிறார்கள். பாலா ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு...
இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











