41 வயது பிரபலம் 4 நாளில் மனைவியை அடித்தார்.. புதுப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் காயம்.. என்ன ஆச்சு?
மும்பை: திருமணம் ஆகி சில நாட்களே ஆன நிலையில், மனைவியை அடித்து உடம்பெல்லாம் காயமாக்கி இருக்கும் பிரபலத்துக்கு எதிராக அவரது மனைவியின் சகோதரர் வழக்கு தொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருவது பெரும் குற்றமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் ஆன சில நாட்களிலேயே மனைவியை அடித்து அவரது காதையே கேட்காத நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அந்த பிரபல யூடியூபர்.
யூடியூபராகவும் மோட்டிவேஷனல் பேச்சாளராகவும் வெளி உலகில் பல ரசிகர்களை ஏமாற்றி வரும் அந்த பிரபலம் வீட்டில் இப்படியொரு மோசமான வெறிப்பிடித்த மிருகமாக இருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவருக்கு எதிராக தற்போது ரசிகர்களும் திரும்பி உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பிரபல யூடியூபர்: மும்பையை சேர்ந்த பிரபல யூடியூபரும் நம்பிக்கை அளிக்கும் பேச்சுக்களை பேசி வருபவருமான விவேக் பிந்த்ராவுக்கு 41 வயதாகிறது. அவரது யூடியூப் சேனலை பல லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். மோடிவேஷனல் ஸ்பீச் கொடுப்பதில் கெட்டிக்காரரான அவருக்கு பல பெண் ரசிகைகளும் உள்ளனர்.
இந்த மாதம் தான் திருணம் நடந்தது: விவேக் பிந்த்ராவுக்கும் இளம் பெண் யானிகா பிந்த்ராவுக்கும் கடந்த டிசம்பர் 6ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. அவரது யூடியூப் ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் அந்த தம்பதியினரை வாழ்த்தினர். கோலாகலமாக திருமணம் நடைபெற்று ஹனிமூன் என குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பார் என பார்த்தால் சில நாட்களிலேயே இப்படியொரு காரியத்தை செய்து விட்டு வழக்கில் சிக்கி உள்ளார்.
மனைவியை கொடூரமாக தாக்கி: டிசம்பர் 6ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், 4 நாட்களிலேயே மனைவியை அடித்துக் கொடுமைப் படுத்தியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மேலும், டிசம்பர் 14ம் தேதி அவர் மீது நொய்டாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உடம்பெல்லாம் காயம்: விவேக் பிந்த்ராவின் அம்மாவுக்கும் யானிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட இடையே புகுந்த விவேக் பிந்த்ரா தனது மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். உடம்பு முழுக்க காயத்துடன் யானிகா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், போலீஸார் விவேக் பிந்த்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதிலேயே ஓங்கி அறை விட்டதில் காது கேட்கவில்லை எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











