twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    41 ஆண்டு கால தவம்.. சரித்திரம் படைத்த இந்திய ஹாக்கி அணி.. பாராட்டித் தள்ளும் சினிமா பிரபலங்கள்!

    |

    சென்னை: 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்திருப்பதை ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில் ஒலிம்பிக் நடைபெறுமா? நடைபெறாதா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

    வேற லெவல் வெண்பா... பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் அசத்தல் பாத் டப் ஃபோட்டோஷுட் வேற லெவல் வெண்பா... பாரதி கண்ணம்மா ஃபரீனா ஆசாத்தின் அசத்தல் பாத் டப் ஃபோட்டோஷுட்

    ஆனால், ஜப்பான் அரசு நிச்சயம் திட்டமிட்டபடி டோக்கியோவில் ஒலிம்பிக்கை நடத்தி தீருவோம் என பல இன்னல்களுக்கு நடுவே ஒலிம்பிக்கை இந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

    குவிகிறது பாராட்டு

    குவிகிறது பாராட்டு

    இப்படியொரு சரித்திர வெற்றியை ஹாக்கி அணி செய்துள்ள நிலையில், விளையாட்டுத் துறையினர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் இந்திய ஹாக்கி அணியினரை உச்சு முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.

    சக் தே இந்தியா

    சக் தே இந்தியா

    இயக்குநர் ஷிமித் அமின் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் சக் தே இந்தியா படத்தில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றி சரித்திரம் கூறப்பட்டு இருக்கும். இந்திய ஹாக்கி அணியினர் வென்றதை கொண்டாட ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன #ChakDeIndia என்ற ஹாஷ்டேக், #meninblue உள்ளிட்ட ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

    கமல் வாழ்த்து

    கமல் வாழ்த்து

    41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மனதார வாழ்த்துகிறேன். நமது தேசிய விளையாட்டை உலக அரங்கில் மீண்டும் தலைநிமிரச் செய்திருக்கிறீர்கள் என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் போட்டுள்ளார்.

    வாழ்த்திய அக்‌ஷய்

    வாழ்த்திய அக்‌ஷய்

    ரஜினிகாந்தின் 2.0 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றியை கொண்டாடி வருகிறார். 41 வருடங்கள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று சரித்திரத்தை மாற்றி எழுதி அசத்திட்டீங்க.. வாழ்த்துக்கள் என பாராட்டி உள்ளார்.

    ஷாருக்கான் ஹாப்பி

    ஷாருக்கான் ஹாப்பி

    சக் தே இந்தியா படத்தில் இந்திய ஹாக்கி அணியின் கோச்சாக நடித்திருப்பார் நடிகர் ஷாருக்கான். இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கடும் போராட்டத்திற்கு பிறகு கடைசி பதக்கமான வெண்கலத்தை வென்று இந்திய ஹாக்கி அணி தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பதை பார்த்து நடிகர் ஷாருக்கான் எக்ஸைட்டிங் மேட்ச் என பாராட்டி உள்ளார்.

    மம்மூட்டி வாழ்த்து

    மம்மூட்டி வாழ்த்து

    ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த ஒட்டுமொத்த ஹாக்கி டீமுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரம் மம்மூட்டி ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார். குறிப்பாக ஸ்ரீஜேஷ் கடைசி நேரத்தில் சூப்பராக சேவ் பண்ணி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் என்றும் மம்மூட்டி குறிப்பிட்டுள்ளார்.

    சிங்கப்பெண் வாழ்த்து

    சிங்கப்பெண் வாழ்த்து

    தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ஸ்போர்ஸ்ட் படமான பிகில் படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் சிங்கப்பெண்ணாக நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் இந்திய ஹாக்கி அணியின் அபார வெற்றியை கொண்டாடி வருகிறார். 40 டிகேட்கள் கடந்து மிகப்பெரிய சாதனையை செய்த மென் இன் ப்ளூவுக்கு வாழ்த்துக்கள் என ட்வீட் போட்டுள்ளார்.

    பாலாஜி முருகதாஸ் கணிப்பு

    பாலாஜி முருகதாஸ் கணிப்பு

    நிச்சயம் இந்த வெற்றி இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலத்தை மாற்றும் 41 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பரான வெற்றி என பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினரை பாராட்டி உள்ளார்.

    ஹிஸ்டரி

    ஹிஸ்டரி

    மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை பாராட்டி 'History' என ட்வீட் போட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    ஆத்மிகா ஆதரவு

    ஆத்மிகா ஆதரவு

    மீசையை முறுக்கு, நரகாசூரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ஆத்மிகா எப்போதுமே சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய விளையாட்டு துறைக்கு என்னவொரு வரலாற்று தருணமாக இந்த அபார வெற்றி அமைந்துள்ளது என தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    சனம் வாழ்த்து

    சனம் வாழ்த்து

    கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை மீண்டும் ஒரு முறை இந்திய ஹாக்கி அணியினர் நிரூபித்துக் காட்டி உள்ளனர். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியினருக்கு என் அன்பான வாழ்த்துக்கள் என பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ட்வீட் போட்டுள்ளார்.

    நெட்பிளிக்ஸ் வாழ்த்து

    நெட்பிளிக்ஸ் வாழ்த்து

    இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று மாலை சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, அதிதி பாலன், அஞ்சலி என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள நவரசா ஆந்தாலஜி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

    English summary
    From Shah Rukh Khan, Akshay Kumar to Reba Monica John, Bigg Boss fame Balaji Murugadoss and Sanam Shetty so many celebrities sending wishes to Team India Hockey.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X