twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்றும் இளமை மாறா…16 வயதினிலே வெளியாகி 43 ஆண்டு நிறைவு !

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாக திரைத்துறையினரைப் புரட்டிப்போட்ட திரைப்படம் "16 வயதினிலே" 1977 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியானது.

    பாரதிராஜாவின் அறிமுகத் திரைப்படம் என எந்த ஒரு இடத்திலும் தெரியாத வகையில் மிக நேர்த்தியாக தமிழ் மண் மணம் கலந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று குவித்தது.

    பல்வேறு விருதுகள் பல பாராட்டுக்கள் என வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து கொண்டாடப்பட்ட 16 வயதினிலே, படம் வெளியாகி இன்று 43 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்சினிமாவின் பெருமையாக பலராலும் இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் இந்த படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி 43 வது ஆண்டை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

     பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்! பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்!

    ஆகச் சிறந்த படைப்பாக

    ஆகச் சிறந்த படைப்பாக

    இந்திய சினிமா எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தாலும் அழிக்கமுடியாத காவியமாக விளங்கிவரும் "16 வயதினிலே " திரைப்படம் இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாக இன்றுவரை உயர்ந்து நிற்கிறது.

    பாரதிராஜாவின் அறிமுகம்

    பாரதிராஜாவின் அறிமுகம்

    மண் மணம் மாறாத காட்சி எழில், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு, வியக்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சி என பலரையும் ஆச்சரியத்தின் உட்சத்தில் கொண்டு சென்ற 16 வயதினிலே திரைப்படம் பாரதிராஜாவின் அறிமுக திரைப்படமாகும்.

    பலரும் தயங்கும் வேடத்தில்

    பலரும் தயங்கும் வேடத்தில்

    1977 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு கிட்டத்தட்ட 175 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. கமல்ஹாசன் இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹீரோக்கள் பலரும் தயங்கும் வேடத்தில் நடித்து இந்திய சினிமாவில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    ஹீரோவுக்கு சம்பந்தமே இல்லாத

    ஹீரோவுக்கு சம்பந்தமே இல்லாத

    கலர் கலர் பேண்ட் சட்டை, பளிச்சிடும் முகம் என ஹீரோக்களுக்கு ஒரு தனி அடையாளம் இருந்து வந்த காலத்தில் இந்திய அளவில் மிகப் பிரபலமான ஹீரோவாக வலம் வந்த கமல்ஹாசன் இந்தப் படத்தில் வெறும் கோவணத்துடன் வாயில் வெற்றிலை போட்டு கொண்டு ஹீரோவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

    "மயில்" என்ற தலைப்பு‘

    16 வயதினிலே முழுக்க முழுக்க ஸ்ரீதேவியின் "மயிலு" கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு முதன்முதலில் "மயில்" என்ற தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படம் வெளியாகும்போது 16 வயதிலே என மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி பலருக்கும் பரிச்சயமானது.

    வில்லன் கதாபாத்திரத்தில்

    வில்லன் கதாபாத்திரத்தில்

    பள்ளி படிக்கும் 16 வயது பெண் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடித்து கலக்கி இருக்க ரஜினிகாந்த் பரட்டை என்ற பெயரில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். சப்பாணி, பரட்டை, மயில், டாக்டர் என இந்த நான்கு கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    தேசிய விருது

    தேசிய விருது

    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி இருந்த அனைத்து பாடல்களும் இந்த திரைப்படத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் பாடகி எஸ் ஜானகி இந்த திரைப்படத்தில் பாடியதற்காக தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு தமிழில் மாபெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படம் பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலாய் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

    இன்றும் இளமையுடன்

    இன்றும் இளமையுடன்

    இவ்வாறு 43 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருந்து வரும் 16 வயதினிலே ரசிகர்களின் மனதில் இன்றும் இளமையுடன் இருக்க ரசிகர்கள் பலரும் இன்று இதன் 43வது ஆண்டை கொண்டாடும் வகையில் சமூக வலைதளங்களில் இந்தப் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    43 years of 16 Vayathinile
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X