‘’வருக..வருக..தமிழ்நாட்டுக்கு வருக’’..செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை ரஜினி வெளியிட்டார்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச சதுரங்க வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு 8 மாணவர்கள் என்கிற அளவில் 38 மாவட்டங்களையும் சேர்த்து 152 மாணவர்களும், 152 மாணவிகளும் என 304 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைக் காண சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

அட்டகாசமான டீசர்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 ஆம் தேதி44 ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி ரூ 100 கோடி செலவில் நடக்க இருக்கிறது. அதனை 28ம் தேதியன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்த போட்டிக்கான டீசர் வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வருக வருக தமிழ்நாட்டுக்கு வருக என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அட்டகாசமாக உருவாகி உள்ளது. இந்த அந்த டீசர் வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். மேலும் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர் நடனமாடி உள்ளார்.

விரைவில் குணமடைய வேண்டும்
மேலும், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய திரு. மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

மகிழ்ச்சி
அதனை எதிர்வரும் 28ம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய திரு நரேந்திர மோடிஜி அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு வீடியோவாக தயாரித்துள்ளார். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரம்மாண்டமாக
இதன் தொடக்க போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. இதன் தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications











