48 மணிநேரம் இடைவிடாமல் சண்டைக் காட்சியில் நடித்த புதுமுகம்!

By Shankar

குரு சுக்ரன் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் 48 மணி நேரம் இடைவிடாமல் நடித்தார் ஒரு புதுமுகம். அவர் பெயர் குரு.

படத்தின் பெயர் 'குரு சுக்ரன்'.

குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

திரிபுரா, சாத்னா

திரிபுரா, சாத்னா

இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பி ஆனந்த்

பி ஆனந்த்

சந்தோஷ் சந்திரபோஸ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ஆனந்த்.

இரட்டையர்கள்

இரட்டையர்கள்

படம் பற்றி இயக்குனர் ஆனந்திடம் கேட்டோம். அவர் கூறுகையில், "இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் அறிமுகமாகிறார்கள் இருவருமே ட்வின்ஸ். சமீபத்தில் வில்லன் அருள்மணியுடன் குரு மோதும் ஒரு சண்டைகாட்சி மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அரங்கு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.

48 மணி நேரம்

48 மணி நேரம்

48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டன்ட் காட்சியில் பங்குபெற்றது ஆச்சர்யமான விஷயம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்கள் இயக்குனர் ஆனந்தும் ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வாவும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X