கவுண்டமணி நடிக்கும் 49ஓ அரசியல் படமா?

By Shankar

சென்னை: கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49ஓ படம் அரசியல் படமல்ல.. விவசாயிகளுக்காகப் பேசும் படம் என்று படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் 49 -ஒ.

goundamani

இதில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்த படம் என்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

விவசாயிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைக் களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைபடம் அடுத்த மாதம் ஏப்ரலில் திரைக்கு வர இருக்கிறது.

49 ஓ என்பது தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் படிவத்தின் பெயர். எனவே இந்தப் படம் அரசியல் சம்பந்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், "இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் இல்லை... இது ஒரு நகைச்சுவை கொண்ட பொழுபோக்கு கொண்ட படம்.

தற்போது நமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். கவுண்டமணி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளுக்காகப் பேசுகிறார். விவசாயிகள் நலன் கருதி எடுக்கபட்ட 49ஓவுக்கு தமிழக மக்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புகிறோம்.

இந்த படத்தில் விடிவி.கணேஷ் மற்றும் ஆரண்ய காண்டம் புகழ் சோமசுந்தரம், சத்தியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X