இளம் வெற்றி இயக்குனரின் துருவங்கள் பதினாறு..4 ஆண்டுகள் நிறைவு!
சென்னை: ரஹ்மான், பிரகாஷ் விஜயராகவன், அஸ்வின் குமார் நடிப்பில் வெளி வந்த படம் துருவங்கள் பதினாறு.
இந்த படத்தை கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருந்தார், ஜேக்ஸ் பேஜாய் இசை அமைத்திருந்தார்.
இந்த படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைவதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

சிறந்த திரைப்படம்
கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய பெயரை தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் இந்த படத்தின் பெரிய வெற்றியின் மூலம் பதிவு செய்தார் கார்த்திக் நரேன்.

யாஷிகா அறிமுகம்
இந்த படத்தில் நடிகர் ரஹ்மான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஹ்மானின் கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பல பாராட்டுகளை பெற்றது. இன்று தன்னுடைய கவர்ச்சியின் மூலம் பலரை கவர்ந்து வரும் யாஷிகா இந்த படத்தில் தான் அறிமுகமானார்.

கன்னடத்தில் மறு ஆக்கம்
IIFA Utsavam Award For Best Story - Tamil எனும் விருதை இந்த படத்திற்காக இயக்குனர் கார்த்திக் நரேன் பெற்றார். இந்த படம் விமர்சன/வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கன்னட மொழியில் Aa Drushya என்னும் தலைப்பில் மறு ஆக்கமும் செய்தனர்.

தமிழ் சினிமாவின் சிறப்பு
இந்த படத்தை எழுதி,இயக்கி வெளியிட்ட போது கார்த்திக் நரேனுக்கு வயது 22. இளம் இயக்குனராக தமிழ் சினிமாவில் சிறந்த படத்தை அளித்த கார்த்தி நரேனை பலரும் பாராட்டினர் குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வியந்து பாராட்டினார்.


Click it and Unblock the Notifications