தியேட்டர்களை தெறிக்க விட்ட தெறி.. ரிலீசாகி இன்றுடன் 4 வருஷம் ஆகுது.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு, தளபதி விஜய்யுடன் இயக்குநர் அட்லி இணைந்து இயக்கிய தெறி படம் ரிலீசாகி இன்றுடன் 4 வருடத்தை கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா, சுனைனா, மொட்டை ராஜேந்தர் மற்றும் பேபி நைனிகா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்த தெறி படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் திரைப்படமாக கடந்த 2016ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
இன்றுடன் 4 வருடங்கள் கடந்துள்ளதை விஜய் ரசிகர்கள் #4YearsOfATBBTheri என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தெறிக்கவிட்ட தெறி
தளபதி விஜய்யை செம ஸ்டைலான போலீஸ் அதிகாரி விஜய்குமாராக இயக்குநர் அட்லி தெறி படத்தில் அழகாக காண்பித்து இருப்பார். தெறி படத்தின் கதைக்களம் ஏற்கனவே வந்த படங்களின் சாயல்களில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை தெறி படைத்தது.
விஜய் ரசிகன்
இயக்குநர் அட்லி தான் ஒரு அதி தீவிர விஜய் ரசிகன் என்பதை தெறி படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிகர் விஜய்யை மாஸாக காட்டி நிரூபித்து இருப்பார். அந்த ரசிகத் தன்மை தான் தெறி படத்தைத் தொடர்ந்து, மெர்சல், பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை விஜய் - அட்லி கூட்டணியில் வெளிக் கொண்டு வந்தது.
எங்க அண்ணன்
தெறி படம் வெளியான நிலையில், 100 நாட்கள் தொடர்ந்து ஒவ்வொரு தியேட்டருக்கும் சென்று, ரசிகர்களுடன் தெறி வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த இயக்குநர் அட்லி, விஜய் படம் தொடர்பான நிகழ்ச்சியில், எங்க அண்ணன் விஜய் என்று காலரை தூக்கி விட்டு கெத்தாக பேசி வருகிறார்.
டிரிபிள் ட்ரீட்
கொரோனா கலவரத்திலும் விஜய் ரசிகர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட 3 முக்கிய காரணங்கள் இருக்கின்றன. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் பிறந்த நாள், தெறி படம் ரிலீசாகி 4 வருஷம், சச்சின் படம் ரிலீசாகி 15 வருஷம் என டிரிபிள் கொண்டாட்டத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிஸ்ஸிங்
கொரோனா வைரஸ் பரவாமல் இருந்திருந்தால், இந்நேரம் மாஸ்டர் ரிலீஸை தியேட்டர்களில் திருவிழாவைப் போல தளபதி ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், அந்த கொண்டாட்டத்தை மட்டும் விஜய் ரசிகர்கள் ரொம்பவே மிஸ் பண்ணி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











