twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்ஸ் விழாவில் இளையராஜா இசையமைத்த குறும்படம் 'அம்மா'!

    By Shankar
    |

    Ilayaraja
    பிரபல கலை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ள அம்மா என்னும் குறும்படம் கேன்ஸ் திரைபட விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. இந்த குறும்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

    கலை இயக்குனரான பிராபாகரன் முதல் முறையாக அம்மா என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை எழுதிய சிறுகதையை மையமாக‌ கொண்டு உருவான குறும்படம் இது. முழுக்க முழுக்க கொடைக்காணலில் படமாக்கப்பட்டுள்ளது.

    இந்த குறும்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். பியானோ,வயலின் போன்ற இசை கருவிகளை மட்டுமே பயன்படுத்தி சர்வதேச தரத்தில் பின்னணி இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இளையராஜாவின் இசை குறும்படத்தின் தன்மையையும்,உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் சிற‌ப்பாக அமைந்துள்ளதாக இயக்குனர் பிரபாகரன் தெரிவித்தார்.

    மைனா படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் அம்மா-வுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    கொடைக்காணலில் வசித்து வரும் அமெரிக்கரான மார்க் ஆந்தோரபஸ் ஃபாதர் டேனியலாக‌ முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மைனா படத்தில் நாயகியின் சிறுவயது தோற்றத்தில் நடித்த சிறுமி அர்ச்சனா முல்லி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கேன்ஸ் தவிர, மேலும் மாஸ்கோ, சிகாகோ, ஆர்லான்டோ திரைப்பட விழாக்களிலும் இந்த குறும்படம் பங்கேற்க உள்ளது.

    பிரபாகரன் கடந்த 15 ஆண்டுகளாக 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சிறந்த கலை இயக்கத்துக்கான தமிழ‌க அரசின் விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.

    English summary
    Amma, a short film directed by leading art director M Prabhakaran has been selected to screen at Canes International film festival. Ilayaraja scored music to the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X