2014 பிளாஷ்பேக்: கிளீவேஜ், விவாகரத்து, பளார், விபச்சாரம்- பாலிவுட் சந்தித்த சர்ச்சைகள்
மும்பை: நடிகர் ரித்திக் ரோஷன் காதல் மனைவியை பிரிந்தது, நடிகை கவ்ஹர் கான் அறை வாங்கியது என்று 2014ல் பாலிவுட் பிரபலங்கள் பல சர்ச்சையில் சிக்கினர்.
2014ம் ஆண்டில் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்கள் ரிலீஸாகின. அதே சமயம் பாலிவுட் பிரபலங்கள் சிலர் சர்ச்சையில் சிக்கியது உள்ளிட்ட கசப்பான சம்பவங்களும் நடந்துள்ளன.
அப்படி பிரபலங்கள் சிக்கிய சில சர்ச்சைகளை பார்ப்போம்.

கவ்ஹர் கான்
பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் டிவி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் இருந்தார். அப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் கவ்ஹர் முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடை அணிந்து ஆபாசமாக நடனமாடுவதாகக் கூறி அவரை கன்னத்தில் அறைந்தார்.

தீபிகா
தீபிகா படுகோனே கிளீவேஜை காட்டி வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட அவரோ நான் பெண், எனக்கு மார்பகம் உள்ளது, அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டார். பதிலுக்கு நாளிதழும் தீபிகாவை விளாசித் தள்ளியது.

ரித்திக் ரோஷன்
பல காலம் காதலித்து மணந்த சூசனை நடிகர் ரித்திக் ரோஷன் பிரிந்தார். 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர். குழந்தைகள் ரிஹான் மற்றும் ரிதான் சூசனுடன் வசித்து வருகின்றனர்.

ப்ரீத்தி ஜிந்தா
நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் ப்ரீத்தியின் புகாரை நெஸ் வாடியா மறுத்துவிட்டார்.

பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வீட்டை வாடகைக்கு விட்டதால் அங்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என பிரியங்கா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











