வெள்ளிக்கிழமை ஐந்தாறு படங்கள் வருது.. ஒன்றாவது தேறுமா?
இந்த வெள்ளிக்கிழைமை நான்கு புதிய படங்களும் அதற்கு இணையாக டப்பிங் படங்களும் வெளியாகின்றன.
வெளியாகும் நேரடித் தமிழ்ப் படங்கள் அனைத்துமே சிறு படங்கள். பெரிய அளவில் வெளியில் தெரியாதவை.

பூவரசம் பீப்பி
இந்தப் படம் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்கியுள்ளார். பெரும்பாலும் புதுமுகங்கள்தான் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளார். கடும் விமர்சனங்களைச் சந்திக்கப் போகும் குழந்தைகள் படம் இதுவாகத்தான் இருக்கும்.

அதுவேற இதுவேற
திலகராஜன் என்பவர் இயக்கியுள்ள படம் இது. இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு என காமெடி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தாஜ் நூர் இசையமைத்துள்ளார். பெல்சி ஜெயசீலன் தயாரித்துள்ளார்.

ஒகேனக்கல்
எம் ஆர் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகும் படம் ஒகேனக்கல். மிகக் குறைந்த தியேட்டர்களில், தயாரிப்பாளர் எழில் புரொடக்ஷன்ஸே சொந்தமாக வெளியிடுகிறது.

அம்மா அம்மம்மா..
அம்மாவின் பெருமை சொல்லும் படம் போலிருக்கிறது இந்த அம்மா அம்மம்மா...பாலு மணிவண்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சரண்யா, சம்பத், ஆனந்த் நடித்துள்ளனர். ஆனால் எந்தத் தியேட்டரில் ரிலீஸ் என்ற விவரம் கூட இல்லாமல் கால் பக்கம் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்!

கல்பனா ஹவுஸ்
குமார் இயக்கத்தில், நாகராஜன் தயாரிப்பில் வெளியாகும் படம் கல்பனா ஹவுஸ். மதுஷாலினி நடித்துள்ள ஹாரர் படம் இது.
இவை தவிர, மந்தாகினி, அப்சரஸ் போன்ற டப்பிங் படங்களும், ப்ளென்டட் மற்றும் மாலெபிஷியன்ட் ஆகிய ஆங்கிலப் படங்களும் இன்று வெளியாகின்றன.


Click it and Unblock the Notifications











