twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 இயக்குநர்கள் இயக்கிய புத்தம் புது காலை எப்படி இருக்கு.. எந்த கதை சூப்பர்? ட்விட்டர் விமர்சனம்!

    |

    சென்னை: அமேசான் பிரைமில் இன்று வெளியாகி உள்ள புத்தம் புது காலை படத்தை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

    சுஹாசினி மணிரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஐந்து தனிக்கதைகளாக புத்தம் புது காலை உருவாகி உள்ளது.

    எந்த இயக்குநரின் கதை சிறப்பாக இருக்கிறது. புத்தம் புது காலை வொர்த்தா? இல்லையா? என்பது குறித்து பார்ப்போம்.

    Putham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்! Putham Puthu Kaalai Review: காதல் முத்திரையில் இருந்து மாறிய கவுதம் மேனன்!

    நேச்சுரலா இல்லை

    நேச்சுரலா இல்லை

    சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள Coffee, Anyone? கதை ரொம்ப நேச்சுலாக இல்லை என்றும், மணிரத்னம் மாதிரி இயக்க முயற்சி செய்துள்ளதை பாராட்டலாம். அனு ஹாசன் நடிப்பில் அசத்துகிறார். சுருதி போர்ஷன் சொதப்பல் என கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.

    ராஜீவ் மேனன் கதை ஓகே

    ராஜீவ் மேனன் கதை ஓகே

    ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள ரீயூனியன் ஓகே ரகம் மட்டுமே சூப்பர் என்று சொல்ல முடியாது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. சிலர், ராஜீவ் மேனன் இயக்கம் ரொம்ப சொதப்பல் என்றும் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆண்ட்ரியாவின் சீன்கள் எல்லாம் பார்க்கும் ரகம் என்றே கமெண்ட்டுகள் குவிகின்றன.

    கெளதம் மேனன் கலக்கல்

    கெளதம் மேனன் கலக்கல்

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த ரிது வர்மா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் இணைந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள அவளும் நானும் கதை பார்க்க ரொம்ப சூப்பராக உள்ளது என்றும், ரொமான்ட்டிக் இயக்குநர் இந்த முறை வேறு ஒரு கதை தளத்தில் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இளமை இதோ

    இளமை இதோ

    சூரரைப் போற்று படத்திற்கு முன்னதாக இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் புத்தம் புது காலை ஒரிஜினலின் இளமை இதோ போர்ஷன் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. ஜெயராம், காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் கலக்கலாக நடித்து கைதட்டல்களை அள்ளி உள்ளனர் என்றும், ஒரிஜினாலிட்டி எங்கேயோ மிஸ் ஆகுது என்றும் கமெண்ட்டுகள் வந்து விழுந்துள்ளன.

    கொரோனா, ஓசி புளியோதரை

    கொரோனா, ஓசி புளியோதரை

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், அவரது ஆஸ்த்தான நடிகரான பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி உள்ள மிராக்கிள் படத்தில் மிராக்கிள் நடந்ததா? இல்லையா? என்கிற ரீதியில் கதை செல்கிறது. கொரோனா, ஓசி புளியோதரை குருஜி என தர லோக்கலில் இறங்கி அடித்தாலும் வொர்த் இல்லையாம் பாஸ்!

    English summary
    Putham Puthu Kaalai out now in Amazon Prime. Top 5 directors Anthology movie reviews and reaction goes viral in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X