துப்பாக்கியுடன் ஃபஸ்ட்லுக்...மாஸ் காட்டும் ஹீரோக்கள்...ஓர் அலசல்
சென்னை : படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுவதற்காக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படப்பிடிப்பு துவங்கப்பட்ட சில நாட்களிலேயே ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிட்டு வருகின்றனர் டைரக்டர்கள். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக்கப்பட்டு வருகிறது.
டாப் ஹீரோக்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கு இப்படி ஃபஸ்ட்லுக் வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டுவது வழக்கமாகி விட்டது. அப்படி தமிழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட மாஸ் ஹீரோக்களின் ஃபஸ்ட்லுக் அனைத்திலும் துப்பாக்கி இடம்பெற்றுள்ளது.
இவை ஆக்ஷன் படம் என்பதை காட்டுவதற்காகவும், கேங்ஸ்டர் படம் என்பதை காட்டுவதற்காகவும் அமைக்கப்பட்டு வருகின்றன. அப்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் எவை என்பதை பார்ப்போம்.

ஜகமே தந்திரம்
இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் 2020 ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. இதில் தனுஷ் இரண்டு கைகளிலும் துப்பாக்கி வைத்து எதிரில் இருப்பவரை சுட்டபடி நடந்து வருவது போல் அமைக்கப்பட்டது. ஃபஸ்ட்லுக்கிலேயே தனுஷின் கேரக்டர், படத்தின் கதையை தெளிவாக கூறி விட்டார்கள். சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் பல்வேறு விமர்சனங்களையும், ரசிகர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

சியான் 60
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். விக்ரம், துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். பழிவாங்கும் கதையை கொண்ட இந்த படம் ஆக்ஷன், ட்விஸ்ட் என நிறைந்ததாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட ஃபஸ்ட்லுக்கில் கையில் ரத்த கரையுடன் சிறுவனிடம் ஒருவர் துப்பாக்கியை கொடுப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது.
இது வரை வெளியான தகவலின்படி இது ஒரு தந்தை - மகன் உறவை சொல்லும் கதை. முதல் முறையாக தந்தை - மகனாகவே நிஜ மகனுடன் நடிக்க போகிறார் என்பதை விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திக்கிறார்கள். வழக்கமான கார்த்திக் சுப்பராஜ் படத்தை போல் இதுவும் ஒரு கேங்ஸ்டர், த்ரில்லர், ஆக்ஷன் கதையாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பும் நடிக்கும் மாநாடு படத்தின் ஃபஸ்லுக்கில் நெற்றியில் குண்டு துளைத்த நிலையில், முகத்தில் ரத்தம் வடிய, சிம்பு தொழுகை செய்வதாக அமைக்கப்பட்டது. வழக்கமான ஃபஸ்ட்லுக்கில் இருந்து இது மாறுபட்டதாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். ஹீரோவின் கேரக்டர் பெயரும் ஃபஸ்ட்லுக்கில் இடம்பெற்றது.
ஆனால் இரண்டாவது லுக்கில் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் சிம்புவை சுற்றி நிறைய சிம்பு இருப்பது போல் அமைக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதனை சிம்பு ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.

எனிமி
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஏராளமான நடிகர்கள் நடித்துள்ள படம் எனிமி. விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இதன் ஃபஸ்ட்லுக்கில் விஷால் மிக நீண்ட துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போல் வெளியிடப்பட்டது. இதை வைத்து இது ஆக்ஷன், துப்பாக்கி சண்டைகள் நிறைந்த படமாக இருக்கும் என தெரிகிறது.
Recommended Video

பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபஸ்ட் லுக், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22 வெளியிடப்பட்டது. அத்துடன் படத்தின் டைட்டிலாக பீஸ்ட் என்ற பெயரும் வெளியிடப்பட்டது. இதில் விஜய் நீண்ட துப்பாக்கியுடன் இருப்பது போல் வெளியிடப்பட்டது. இது வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டது. அதில் கையில் சிறிய துப்பாக்கியுடனும், வாயில் தோட்டாவுடனும் விஜய் இருப்பது போன்றும், பக்கத்தில் பெரிய துப்பாக்கி இருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. பின்னணியில் ஹெலிகாப்டர்கள் பறப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











