2021 ல் தமிழில் ரீமேக் ஆகும் 5 ஹிட் படங்கள்...ரசிகர்கள் ஏற்பார்களா
சென்னை : ஒரு மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தை மற்றொரு மொழியில் ரீமேக் செய்யப்படுவது தற்போது அனைத்து சினிமா துறைகளிலும் வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் பாலிவுட் சினிமாக்கள் தான் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். ஆனால் தற்போது 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள், மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
இப்படி ரீமேக் ஆகும் படங்களையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு, நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அப்படி 2021 ம் ஆண்டு முதலில் ரீமேக் ஆன படம் சிபிராஜ் நடித்த கபடதாரி. ஜனவரி மாதம் ரிலீஸ் ஆனது. இது 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காவலுதாரி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
2021 ல் தமிழில் ரீமேக் ஆக காத்திருக்கும் பிற மொழி படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஆன்டிராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25
டைரக்டர் ரதீஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான இப்படம் சிறந்த திரைக்கதைக்காக கேரள அரசின் 3 விருதுகளை பெற்றது. தற்போது இந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் இயக்குகிறார். இதில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா நடிக்கின்றனர். கூகுள் குட்டப்பன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தென்காசியில் படமாக்கப்பட்டு வருகிறது.

ஹெலன்
2019 ல் மலையாளத்தில் வெளியான த்ரில்லர் படமான இதனை மதுகுட்டி சேவியர் இயக்கி இருந்தார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து ஒரே மாதிரியான விமர்சனத்தை பெற்ற படம் இது. தற்போது தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அருண் பாண்டியன் மற்றும் அவரது நிஜ மகளான கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர். அப்பா - மகள் பாசம் கலந்த த்ரில்லர் படமான இது மார்ச் 5 ம் தேதி ரிலீசாக உள்ளது.

அந்ததுன்
2018 ல் பாலிவுட்டில் ரிலீசாகி, ஹிட்டான த்ரில்லர் படமான இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இந்த படம் பாராட்டுக்களை பெற்றதுடன், கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஆனால் சீன பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றது. தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஜெ.ஜெ.ஃபெட்ரிக் இயக்கும் இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படம் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரீமேக் ஆக உள்ளது.

தி கிரேட் இந்தியன் கிச்சன்
மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கிய இப்படம் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படமும் பல சர்ச்சைகளை சந்தித்தது. இந்த படத்தின் தலைப்பு பற்றியும் கேரளாவில் உள்ள சில டிவி சேனல்களில் விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழில் ரீமேக் ஆகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.
Recommended Video

பெல் பாட்டம்
திகில் த்ரில் படமான இதை ஜெயதீர்த்தா இயக்கி இருந்தார். 2019 ல் ரிலீசான இப்படம், 1980 களில் நடப்பது போன்ற கதையை கொண்டது. தற்போது தமிழில் ரீமேக் ஆகும் இப்படத்தில் கிருஷ்ணா, மகிமா நம்பியார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யசிவா இயக்குகிறார். தமிழிலும் பெல் பாட்டம் என்ற பெயரிலேயே தயாரிக்கப்படும் இப்படம் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











