"சிஸ்டர்"களை கவுரவப்படுத்திய திரையுலக "பிரதர்ஸ்".. ஒரு சபாஷ் பார்வை!

சென்னை : கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ள மக்களை காப்பாற்ற உலகம் முழுவதிலும் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிரை பணையம் வைத்து மருத்துவ சேவையாற்றி வரும் நர்ஸ்களை கவுரவிக்க சர்வதேச நர்ஸ்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

தமிழ் சினிமாவில் நர்ஸ்களை கவுரவப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட படங்கள் மற்றும் மறக்க முடியாத நர்ஸ் கேரக்டர்களைப் பற்றி இங்கே பார்க்க உள்ளோம்.

நந்தினி சிஸ்டர்

நந்தினி சிஸ்டர்

கே.பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுகாசினி, நந்தினி என்ற நர்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார். மிகப்பெரிய குடும்பத்தை தனி ஆளாக இருந்து நிர்வகித்து, அடுத்தடுத்த பல போராட்டங்களை சந்திக்கும் நர்ஸ், மன தைரியத்துடன் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இதில் முதல் முறையாக நர்ஸ் வேடத்தில் சுகாசினி நடித்திருப்பார். தனது பணியில் எப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார். ஒரு நர்ஸ் எவ்வாறு தனது தனிப்பட்ட பிரச்சனைகளை வெளிக்காட்டாமல், கனிவான முகத்துடன் இருக்க வேண்டும் என்பதை காட்டி இருப்பார்.

ரெமோ சிஸ்டர்

ரெமோ சிஸ்டர்

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் வேடத்தில் முதல் முறையாக நடித்திருப்பார். காதலுக்காக நர்ஸ் வேடம் போடும் ஒரு இளைஞரின் கதை. சிவகார்த்திகேயனின் ரொமான்டிக் காட்சிகள் மற்றும் நர்ஸ் காமெடி காட்சிகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். காமெடி படமாக இருந்தாலும் நர்சாக வரும் ரெமோ, தனது செய்கைகளால் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் காட்சிகள் மனதில் அழுத்தமாக பதிவதாக இருக்கும். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நர்ஸ் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மரியம் குட்டி

மரியம் குட்டி

பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிறிய கேரக்டராக இருந்தாலும் மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது மறைந்த நடிகை கல்பனா நடித்த மரியம் குட்டி என்ற கேரக்டர். இந்த படத்தில் டாக்டராக வரும் சிம்ரனின் உதவியாளராக நடித்திருப்பார். கமலின் உடலில் தவறுதலாக வைத்து தைக்கப்பட்ட வாட்ச்சை மீட்க சிம்ரனும், கல்பனாவும் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும். இது மிகப் பெரிய நகைச்சுவை படமாக அமைந்தது.

திவ்யா நர்ஸ்

திவ்யா நர்ஸ்

நர்ஸ் உடையில் மிக அழகான தோற்றத்தில் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள படம் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை. இதில் போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயனுடன், ஸ்ரீதிவ்யாவிற்கு ஏற்படும் காதல் சுவாரஸ்யமானது. சட்ட விரோத உறுப்பு தானம் தொடர்பான இந்த படத்தில் நர்ஸ் தோற்றத்தில் சிறப்பாக நடித்திருப்பார் ஸ்ரீ திவ்யா.

Recommended Video

Mahat Prachi Elegant Baby Shower in Home | வீட்டிலேயே சீமந்தம் | Filmibeat Tamil
நர்ஸ் மணிமேகலை

நர்ஸ் மணிமேகலை

எங்கேயும் எப்போதும் படத்தில் மிக அழகிய, எளிமையான தோற்றத்தில் நர்ஸ் வேடத்தில் அஞ்சலி நடித்திருப்பார். பக்கத்து வீட்டு பையனை காதலிக்கும் துடிப்பான, விளையாட்டான பெண்ணாக நடித்திருந்தாலும் உடல் உறுப்பு தானம் பற்றி மிக அழுத்தமாக சொன்ன படம். திருமணத்திற்கு தான் தகுதியானவள் என்பதை பல்வேறு மருத்துவ சோதனைகள் மூலம் நிரூபிக்கும் காட்சிகள் ரசிப்பவையாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X