இன்று டூரிங் டாக்கீஸ், இசை, புலன் விசாரணை 2, கில்லாடி, தரணி!
இன்று வெள்ளிக்கிழமை 5 புதிய படங்கள் வெளியாகியுள்ளன. கடைசி நேரத்தில் 3 படங்கள் விலகிக் கொண்டன.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முதல் மாதத்திலிருந்தே அதிக படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்த ஜனவரியில் மட்டும் இதுவரை 15 படங்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் 5 படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

டூரிங் டாக்கீஸ்
எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியாகியுள்ள படம் டூரிங் டாக்கீஸ். எஸ் ஏ சந்திரசேகரன் இதில் கதையின் நாயகனாக நடித்தும் உள்ளார். இதில் ஒரே படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகளைப் படமாக்கியுள்ளார் சந்திரசேகரன்.

புலன் விசாரணை 2
எட்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படம் இது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு வந்துள்ளது. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.

இசை
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு வரும் படம் இசை. இரு இசை அமைப்பாளர்களின் ஈகோ மோதல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கில்லாடி
பரத் - நிலா நடித்துள்ள இந்தப் படமும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது. சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் ஏ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். விவேக், ரோஜாவும் நடித்துள்ளனர்.

தரணி
ஆரி நடித்துள்ள இந்தப் படத்தை குகன் சம்பந்தம் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











