நீங்க ஏன் லிங்காவை கண்டிப்பாக பார்க்கணும் தெரியுமா?

By Siva

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தை ரசிகர்கள் ஏன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்பதற்கு காரணம் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள லிங்கா படம் நாளை அதாவது ரஜினியின் பிறந்தநாள் அன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பலர் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நீங்கள் ஏன் லிங்காவை நிச்சயம் பார்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இதோ,

எந்திரன்

எந்திரன்

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்
நடித்த எந்திரன் படம் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் படம் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது. ரா ஒன் இந்தி படத்தில் ரஜினி ஒரு காட்சியில் வந்தார். மேலும் கோச்சடையானில் அவர் நடித்த போதிலும் அது அனிமேஷன் என்பதால் அதை கணக்கில் எடுக்கவில்லை.

ரவிக்குமார்

ரவிக்குமார்

ரஜினிகாந்த் முன்னதாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா என்ற இரண்டு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனால் ரவிக்குமார்-ரஜினி மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள லிங்கா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அனுஷ்கா, சோனா

அனுஷ்கா, சோனா

லிங்கா படத்தில் அனுஷ்கா, சோனாக்ஷி என்று ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் உள்ளனர். அதிலும் சோனாக்ஷி ரஜினியின் நண்பரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் மகள். நண்பரின் மகளுடன் காதல் காட்சியில் நடிக்க ரஜினி வெட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.

கதை சர்ச்சை

கதை சர்ச்சை

தற்போது எல்லாம் பெரிய நடிகர்களின் படம் ரிலீஸாகும் முன்பு அந்த கதை தன்னுடையது என யாராவது வழக்கு தொடர்கிறார்கள். லிங்காவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

பிறந்தநாள்

பிறந்தநாள்

ரஜினி நடிக்க வந்ததில் இருந்து இதுவரை ஒரு படம் கூட அவரது பிறந்தநாளில் ரிலீஸ் ஆனது இல்லை. இந்நிலையில் தான் முதல்முறையாக ரஜினியின் பிறந்தநாள் அன்று லிங்கா ரிலீஸாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X