தமிழில் ஒரு சைரத்.. இந்த 5 காரணங்களுக்காக கன்னி மாடம் படத்தை தாராளமா தியேட்டரில் பார்க்கலாம்!

Recommended Video

Kanni Maadam on theaters from Tomorrow | கன்னி மாடம் படத்தை தாராளமா தியேட்டரில் பார்க்கலாம்!

சென்னை: சீரியலில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிகராக முன்னேறிய போஸ் வெங்கட், தற்போது கன்னி மாடம் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக முகமது ஹசீர் தயாரித்துள்ள கன்னி மாடம் திரைப்படம் நாளை பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.

காதல், சைரத், பரியேறும் பெருமாள் படங்களை தொடர்ந்து காதலுக்கு எதிராக சாதி வெறி காட்டும் கோர முகத்தை இந்த படமும் தோலுரிக்கக் காத்து இருக்கிறது.

கன்னி முயற்சி

கன்னி முயற்சி

தலைநகரம், சிவாஜி, தாம் தூம், சிங்கம், எலி, தீரன் அதிகாரம் ஒன்று, தேவராட்டம், தர்ம பிரபு என பல தமிழ் சினிமா படங்களில் நடித்துள்ள நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில், கன்னி முயற்சியாக இந்த கன்னி மாடம் நாளை திரைக்கு வருகிறது. நடிகராக வெற்றி பெற்ற போஸ் வெங்கட் இயக்குநராகவும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதுமுகங்கள்

பல புதுமுகங்கள்

இயக்குநராக போஸ் வெங்கட் அறிமுகமாகி உள்ள இந்த படத்தின் நாயகன், நாயகி என பல புது முகங்கள், தங்கள் திறமையை வெள்ளித் திரையில் காட்ட வருகிறார்கள். நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக்கும், நாயகியாக சாயா தேவியும் நடித்துள்ளனர். மேலும், ஆடுகளம் முருகதாஸ், ரோபோ சங்கரின் மனைவி, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடும் போட்டி

கடும் போட்டி

பிப்ரவரி 21ம் தேதியான நாளை தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. தேசிய விருது பெற்ற பாரம், அருண் விஜய்யின் மாஃபியா, பாரதி ராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை, காட் ஃபாதர் மற்றும் கன்னி மாடம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. இப்படி ஒரு ரேசில் நல்ல கதையை நம்பி கன்னி மாடம் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.

சூர்யா வாழ்த்து

சூர்யாவின் சிங்கம், ஜோதிகாவின் 36 வயதினிலே மற்றும் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் போஸ் வெங்கட் நடித்திருந்தார். மேலும், நடிகர் சூர்யாவின் நண்பரும் கூட, கன்னி மாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா, போஸ் வெங்கட்டுக்கும் படக்குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

தமிழில் ஒரு சைரத்

தேசிய விருது வென்ற மராத்தி மொழி திரைப்படமான சைரத் படத்துக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு கிடைத்தது. சைரத் படத்தின் கதையை போலவே கன்னி மாடம் படத்தின் கதையும் எதார்த்தமாக அமைந்துள்ளது. காதல், பரியேறும் பெருமாள் படங்களின் வரிசையில், இன்னொரு சாதி வெறிக்கு எதிரான சாட்டையாக கன்னி மாடம் நாளை வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X