இந்த 5 காரணங்களுக்காக கார்த்தியின் ’தம்பி’யை தாராளமா தியேட்டரில் பார்க்கலாம்!

Recommended Video

Surya Jothika Candid Video | Thambi | Pon Magal Vandhal

சென்னை: தீபாவளி ரேசில் விஜய்யின் பிகில் படத்துடன் போட்டி போட்டு சாதித்தது கார்த்தியின் கைதி படம்.

அதேபோல, டிசம்பர் 20ம் தேதியான நாளையும், கார்த்திக்கு மற்றொரு அக்னி பரீட்சை காத்துக் கிடக்கிறது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் தம்பி மோதுகிறது.

இந்த ரேசில் யார் ஜெயிப்பார்கள் என்பது நாளை தெரிந்துவிடும். ஆனால், ஜோதிகாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள கார்த்தியின் 'தம்பி' படத்தை இந்த 5 காரணங்களுக்காக தாராளமாக பார்க்கலாம்.

முதன்முறை

முதன்முறை

அண்ணன் சூர்யாவின் மனைவி மற்றும் நடிகை ஜோதிகாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் கார்த்தி. கார்த்தி மற்றும் ஜோதிகாவின் நடிப்பு குறித்து சொல்ல வேண்டியது இல்லை. இருவரும் நடிப்பில் வெளுத்து வாங்குவார்கள். இப்படியொரு புதுவிதமான கூட்டணிக்காகவே தம்பி படத்தை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

பாபநாசம் இயக்குநர்

பாபநாசம் இயக்குநர்

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த த்ரிஷ்யம் படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் தான் தம்பி படத்தையும் இயக்கியுள்ளார். த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தையும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கி தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள ஜீத்து ஜோசப் நிச்சயம் தம்பி படத்தில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார்.

செளக்கார் ஜானகி

செளக்கார் ஜானகி

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என பழம்பெரும் சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் நடித்த செளக்கார் ஜானகி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது குறும்புப் பார்வையுடன் இந்த படத்தில் கார்த்தியின் பாட்டியாக நடித்துள்ளார். செளக்கார் ஜானகியுடன் நடித்த பல நடிகர்கள் இன்று நம்மிடையே இல்லாத நிலையில், அவரை திரையில் காண்பது ரசிகர்களின் பாக்கியம் தான்.

கைதி அலை

கைதி அலை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் கைதி படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி, விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. கைதி படத்தின் எதிரொலி நிச்சயம் கார்த்தியின் தம்பி படத்திற்கு பிசினஸ் ரீதியாகவும், ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கவும் உறுதுணையாக இருக்கும்.

கார்த்தி

கார்த்தி

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் கார்த்திக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். லுங்கியைக் கட்டிக் கொண்டு டில்லியாக கைதி படத்தில் நடித்து அசத்திய கார்த்தி, சரவணன் ரோலில் ஜோதிகாவின் தம்பியாக நிச்சயம் அசத்தியிருப்பார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள தம்பி அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X