ஹீரோ சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோ ஆக்குமா? ஹீரோவை பார்க்க இதோ 5 காரணங்கள்!
சென்னை: முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே எனும் பாடல் வரிகள் நடிகர் சிவகார்த்திகேயனை கச்சிதமாக பொருந்தும்.
ஹீரோ ஆகிட்டோம் சும்மா ரொமான்ஸ், காமெடின்னு காலத்தை தள்ளிடுவோம்னு நினைக்காம, ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பெரிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்து தனக்கு கிடைத்த இடத்தை விட்டு விடக் கூடாது என்ற முனைப்புடன் தெளிவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் நாளை வெளியாகிறது.
அந்த படத்தை தியேட்டரில் பார்க்க இதோ உங்களுக்காக 5 காரணங்களை கொண்டு வந்துள்ளோம்.

புதிய முயற்சி
விடாமுயற்சி மட்டுமின்றி, பரிசோதனை முயற்சிகளையும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து செய்து வருகிறார். ரெமோ படத்தில் பெண் நர்ஸ் வேடம், சீமராஜாவில் வலறி பிடித்து சண்டையிட்ட தமிழ் மன்னன் கதாபாத்திரம் தற்போது ஹீரோவில் சூப்பர்ஹீரோ. இந்த புதிய முயற்சிக்காகவே ஹீரோ படத்தை தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.

இரும்புத்திரை இயக்குநர்
விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹீரோ படம் நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் ரசிகரான பி.எஸ். மித்ரன் நிச்சயம் டார்க் நைட் ரேஞ்சில் இந்த படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே.ஜே.ஆர் புரொமோஷன்ஸ்
ஹீரோ படம் நிச்சயம் சூப்பர் ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் அந்த படத்திற்கு இந்த அளவுக்கு செலவு செய்து மிகப்பெரிய அளவில் புரொமோஷன்களை செய்து வருகிறது. மேலும், சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டாக்டர் படத்தையும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தயாரிக்க முன் வந்துள்ளது.

பவர்ஃபுல் வில்லன்
தனுஷின் ராஞ்சனா, தேவ் டி, ஷாருக்கானின் ஜீரோ உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள அபய் தியோல் ஹீரோ படத்தில் மாஸ் வில்லனாக நடித்துள்ளார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இரும்புத்திரை படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார். இந்த படத்தில், ஹீரோவை உருவாக்கும் கதாபாத்திரத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். அதனால், நிச்சயம் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வில்லத்தனத்திற்கு இந்த படத்தில் குறை என்பதே இருக்காது.

சூப்பர் ஹீரோ
தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் பெரியளவில் வெளியானது இல்லை. மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படம், பேட்மேன் படத்தை தழுவி எடுக்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு தேவையான பொருட்செலவு மற்றும் பிரம்மாண்ட காட்சிகள் இல்லாததால் அந்த படம் சூப்பர் ஹீரோ பட ரசிகர்களை கவரவில்லை.

தாராளமா பார்க்கலாம்
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் டீஸர் மற்றும் டிரைலர்களில் படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கல்வி பிரச்சனை என சமூக பிரச்சனையை கையாண்டு உள்ளதால், நிச்சயம் இந்த ஹீரோ சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற படங்களை பெரிய திரைகளில் கண்டு ரசித்தால் தான் அந்த எக்ஸ்ஃபீரியன்ஸ் முழுமையாக கிடைக்கும். தியேட்டருக்கு போய் ஹீரோவை குழந்தைகளுடன் கண்டு ரசியுங்கள்.


Click it and Unblock the Notifications











