»   »  கண்ணா.. இந்த 5 காரணத்துக்காக நாம கபாலியைப் பார்த்து ரசிக்கலாம்...!

கண்ணா.. இந்த 5 காரணத்துக்காக நாம கபாலியைப் பார்த்து ரசிக்கலாம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தை பார்க்க 5 காரணங்கள் உள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. கபாலி ரிலீஸாவதையொட்டி சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் செயல்படும் பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

இந்நிலையில் கபாலி படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்களை தெரிந்து கொள்வோம்,

ரஜினி

ரஜினி

ரஜினி படம் என்றாலே இயக்குனர், ஹீரோயின் பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள். ரஜினி டா, சூப்பர் ஸ்டார் டா என்று தான் கூறுவார்கள். அந்த ஒரு காரணத்தாலேயே பலர் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பார்கள். இந்நிலையில் கபாலியில் ரஜினி இளம் வயது மற்றும் சால்ட் அன்ட் பெப்பர் என இரு கெட்டப்புகளில் வரும் போது படத்தை பார்க்க காரணமா தேவை?

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி வந்த ராதிகா ஆப்தே கபாலி படத்தில் அருமையாக நடித்துள்ளார். தைவானை சேர்ந்த வின்ஸ்டன் சோ மற்றும் மலேசியாவை சேர்ந்த ரோஸ்யம் நார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

என்டர்டெயின்மென்ட்

என்டர்டெயின்மென்ட்

கபாலி படத்தில் காதல், ஆக்ஷன் மற்றும் காமெடி ஆகியவை சரியான கலவையில் உள்ளதாம். ஆக்ஷன் காட்சிகளில் டானாக வரும் ரஜினி ராதிகா ஆப்தே உடனான காதல் காட்சிகளில் மன்மதனாகிவிடுகிறாராம்.

இசை

இசை

ஏற்கனவே ஊர், உலகம் எல்லாம் நெருப்புடா முடியுமா என கபாலி பட பாடலைத் தான் பாடிக் கொண்டிருக்கிறது. கபாலி படத்தின் இசை ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

கபாலிக்கு ஏற்கனவே கண்டமேனிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லேப்டாப் கவர், செல்போன் கவர், ஆட்டோ என எங்கு பார்த்தாலும் கபாலியின் புகைப்படங்கள் தூள் கிளப்புகின்றது. படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பே பலரை தியேட்டருக்கு சுண்டி இழுக்கிறது.

English summary
Above are the five reasons as to why you should watch superstar Rajinikanth starrer Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos