'புஷ்பா 2' படத்தை இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புஷ்பா'. தற்போது 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உலகம் முழுக்க நேற்று தியேட்டரில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வரும் நிலையில், இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டியதன் 5 காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
புஷ்பா 2 படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பு, உடல்மொழி, வசனம் உச்சரிக்கும் முறை என அனைத்தும் அனைத்து மொழி ரசிகர்களையும் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.
புஷ்பா முந்தைய பாகத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த புஷ்பராஜ், படிப்படியாக உயர்ந்து, அந்த காட்டுக்கு ராஜாவான அல்லு அர்ஜுன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும், ஃபஹத் பாசில், புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

நட்சத்திர நடிகர்கள்: மேலும், இப்படத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் புஷ்பாவின் முக்கிய எதிரியாக ஃபஹத் பாசில் என அனைத்து முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். முதல் பாகத்திலே இவர்களின் நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தனர். அது வீண் போகவில்லை என்பது போல, ஒவ்வொரு நடிகரும் அவர்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் மட்டுமில்லாமல், இரண்டாம் பாகத்தில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் தாரக் பொன்னப்பா என சில புதிய முகங்களும் இதில் நடித்துள்ளனர்.
அதிரடியாக சண்டை: இப்படத்தின் தயாரிப்பு பணி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி படத்தின் மீது ஒரு ஹைப்பை கொடுத்தன. மேலும், முதல் பாகத்தை போல, பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளும் புஷ்பா 2வில் உள்ளது. இதில் பன்வார் சிங் என்ற கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காவல் துறை அதிகாரியான ஃபஹத் பாசிலின் நடிப்பை பார்க்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
கிஸ்ஸிக் பாடல்: முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா’ பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் சமந்தாவின் நடனம் என்று சொல்லலாம். தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். முதல் பாகத்தை போல 'புஷ்பா 2’ படத்திலும் 'கிஸ்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இந்த பாடலை தியேட்டரில் பார்க்க அனைவரும் தியேட்டரில் முகாமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











