»   »  இன்றைய படங்கள்... மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம்!

இன்றைய படங்கள்... மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை 5 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

அவை மரகத நாணயம், புலி முருகன், பீச்சாங்கை, தங்கரதம், உரு

மரகத நாணயம்

மரகத நாணயம்

ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தை ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தியாவில் 500-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

புலி முருகன்

புலி முருகன்

மலையாளத்தில் அதிரடி வெற்றிப் படமான புலிமுருகன் தமிழில் பிரமாண்டமாக வெளியாகிறது. மோகன் லால், நமிதா, கமலினி முகர்ஜி நடித்துள்ள இந்தப் படம் தமிழில் 300-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது. வைசாக் இயக்கியுள்ளார்.

பீச்சாங்கை

பீச்சாங்கை

கார்த்திக், அஞ்சலி ராவ், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பீச்சாங்கை படத்தை அசோக் இயக்கியுள்ளார். இடது கைப் பழக்கத்தை வைத்து காமெடியாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

தங்கரதம்

தங்கரதம்

பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்க ரதம் படத்தில் சௌந்தர்ராஜா, வெற்றி, அதிதி கிருஷ்ணா நடித்துள்ள தங்கரதம் படத்தை என்டிசி மீடியா மற்றும் வீகேர் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

உரு

உரு

கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள உரு படத்தை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார். ஜோகன் இசையமைத்துள்ளார். வையம் மீடியா தயாரித்துள்ளது.

English summary
There are 5 direct Tamil movies are releasing this Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil