Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைக்கு சளி, காய்ச்சல் போன்ற எந்த தொற்றுநோயும் வராமல் தடுக்க இந்த தண்ணீரை குடிச்சா போதுமாம்!
- News
"உண்மையில்லை".. சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்கிறது பிபிசி.. பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Automobiles
பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டராக மாறிய பெட்ரோல் ஆக்டிவா... இவ்ளோதான் ஒட்டுமொத்த செலவேவா!!
- Sports
"இனியும் இந்தியாவை நம்ப மாட்டோம்..ரொம்ப ஏமாத்துறாங்க" டெஸ்ட் தொடர்.. ஆஸி, வீரர்கள் பரபரப்பு கருத்து
- Technology
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னடா இப்படி ஆகிப்போச்சு..ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக்..யாஷிகாவால் காவலர்களுக்கு வந்த சோதனை!
சென்னை : நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்து ராம்ப் வாக் போன காவலர்கள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.
கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் துருவங்கள் 16, விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, யோகி பாபுவுடன் ஜாம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நம்ம ரெகுலர் வாழ்க்கையில இருந்து பிரேக் எடுக்கறது முக்கியம்.. ஐஸ்வர்யா எங்கே போயிருக்காங்க தெரியுமா?

நடிகை யாஷிகா ஆனந்த்
நடிகை யாஷிகா ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். அதன் பிறகு, ஏராளமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வாசல் கதவை தட்டியதை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

ஃபேஷன் ஷோ
இந்நிலையில்,நடிகை யாஷிகா ஆனந்த் மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம் நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை யாஷிகா ராம்ப் வாக் செய்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விதவிதமான உடைகளை அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்து அசத்தினர்.

காவலர்கள் ராம்ப் வாக்
இந்த நிகழ்ச்சிக்கு யாஷிகா ஆனந்த் கலந்து கொள்வதால், பாதுகாப்புக்காக அங்கு சில காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். இதையடுத்து, ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த காவலர்களை சிலர் ராம்ப் வாக் நடக்கும் படி கூறியுள்ளனர். அங்கிருந்த பலர் காவலர்களை உற்சாகப்படுத்தியதால், உற்சாகம் அடைந்த காவலர்கள். ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்த மேடையில், சிங்கம் பாடலுடன் ராம்ப் வாக் நடந்து இருந்தார்கள்.

இப்படி ஆகிப்போச்சே
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி காவல்துறையினர் போலீஸ் உடையில் இந்த மாதிரி ராம்ப் வாக் நடப்பதா? என சர்ச்சை கிளப்பியது. இதனையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், காவலர்களான ரேணுகா, அஸ்வினி, நித்திய ஷீலா, சிவநேசன் ஆகியோரையும் மயிலாடுதுறையில் உள்ள வெவ்வேறு காவல்துறைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒழுங்கு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் இணையத்தில் சிலர் என்ன யாஷிகா இப்படி ஆகிப்போச்சு என்றும், சும்மா நின்னவங்கள இப்படி பண்ணிட்டீங்களே என நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.