காலத்தை கடக்கும் டைம் மிஷின் ‘’24’’… கண்டுபுடுச்சி 5 வருஷம் ஆச்சு !
சென்னை : சூர்யாவின் '24' திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 வருடம் ஆகியது.
இதை இணையத்தில் #5yearsof24 என டிரெண்டிங் செய்து வருகின்றனர் சூர்யாவின் தீவிர ரசிகர்கள்
இதில் சமந்தா, நித்தியா மேனன், சரண்யா பொண்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வெரைட்டி காட்டிய சூர்யா
2016ம் ஆண்டு விக்ரம் குமார்இயக்கத்தில் ஒரு ஒரு சையின்ஸ் திரைப்படம் தான் 24. இந்த படத்தில் அப்பாவி விஞ்ஞானி சேதுராமரானாவும், அட்ராசிட்டி செய்யும் வில்லன் ஆத்ரேயாகவும், சுறுசுறு மணி என 3 வேடத்தில் நடித்து வெரைட்டி காட்டி இருப்பார் சூர்யா.

டைம் மிஷின்
1990களில் கதை தொடங்குகிறது. சேதுராமன் என்ற விஞ்ஞானி (சூர்யா) காலத்தை கடக்கும் ஒரு டைம் மிஷினை கண்டுபிடிக்கிறார். அதை அபகரிக்க திட்டமிடுகிறார் வில்லன். இது தெரிந்த சேதுராமன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தப்பிக்கும் போது கொல்லப்படுகிறார். அவர்களின் குழந்தை யை சரண்யா வளர்க்கிறார்.

வாட்ச்
இதையடுத்து , கதை 24 வருடங்கள் கழித்து தொடங்குகிறது. அப்போதுதான் காலத்தை கடக்கும் டைம் மிஷின் பற்றி சூர்யாவிற்கு தெரிகிறது. அந்த வாட்ச் வில்லன் கையில் கிடைக்கிறதா என்பதை பல ட்விஸ்ட்களுடன் கூறி இருப்பார் இயக்கிறார். மொத்தத்தில் 24 என்ற அந்த வாட்சை சுற்றித்தான் மொத்த கரையும் நகர்கிறது.

#5 yearof24The Movie
அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தித்து வந்த சூர்யாவுக்கு 24 திரைப்படம் ஒரு ஹிட் திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் ஏஆர் ரஹ்மான் இசை பட்டையை கிளப்பி இருக்கும். இந்த திரைப்படம் திரையில் வெளியாகி இன்றோடு 5 வருடங்கள் ஆகின்றன. இதை சூர்யாவின் ரசிகர்கள் #5 yearof24The Movie என பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications











