சாதி அரசியலுக்கு வலுவான அடி கொடுத்த… உறியடி படம் வெளியாகி 5 ஆண்டு நிறைவு!
சென்னை : உறியடி திரைப்படம் வெளியாக 5 ஆண்டுகள் நிறைவடையொட்டி இப்படம் குறித்த புகைப்படமும் தகவல்களும் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகின்றன..
2016 ஆம் ஆண்டில் வெளியான முற்றிலும் வித்தியாசமும், விறுவிறுப்பான கதைக்களும, அரசியல் பரபரப்பூட்டும் திரைப்படம் தான் உறியடி.
ஒரு மெல்லிய கதையில், எத்தனை வலிமை, திறமை சொல்ல முடியுமே அத்தனையும் அழகாக இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கும்.

உறியடி
இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் குமார் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்திருந்தார். செல்லுலாய்டு நேர்த்திக்குத்தான் பணம் தேவை, நல்ல ஸ்கிரிப்ட் எழுதத் திறமை போதும் எனச் சொல்லி அடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் விஜய்குமார்.

சாதி அரசியல்
ஒரு சில சாதிச் சங்ககள் செய்யும் அடாவடியை மட்டும் காட்டாமல், அது கட்சியாக உருவாவதன் பின்னணி குறித்து எடுத்துரைத்த காட்சியும் அழகாக இருக்கும். இப்படத்தில் மைம் கோபி மற்றும் சிட்டிசன் சிவக்குமார் ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்திருந்தனர்.

இணையத்தில் டிரெண்டிங்
சாதி அரசியலையும் அதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் பற்றியும் நேர்மையாக பதிவாக இந்த திரைப்படம் அமைந்து இருந்ததால் அனைத்து தரப்பு மக்களும் இப்படத்தை பாராட்டின். இத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இப்படம் குறித்த புகைப்படமும் தகவல்களும் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

பாராட்டை பெற்றது
மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உறியடி2 என்னும் பெயரில் 2019ம் ஆண்டு திரைப்படம் வெளியானது. இப்படத்தையும் எழுதி, இயக்கி, நடித்திருந்தார் விஜயகுமார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றது.


Click it and Unblock the Notifications











