ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு 50 போலீஸ், 30 பவுன்சர்கள் பாதுகாப்பு!

By Shankar

மைசூர்: மைசூரில் நடக்கும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு இதுவரை இல்லாத அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரஜினி - சோனாக்ஷி காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்களில் சோனாக்ஷிக்கு மட்டுமே 50 போலீசார், 30 பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்களாம்.

சலசலப்பு

சலசலப்பு

லிங்கா படப்பிடிப்பில் ரஜினியும் சோனாக்ஷியும் நடித்துக் கொண்டிருந்தபோது, வெளியில் அடிக்கடி கூச்சல் கேட்டுக் கொண்டே இருக்குமாம். இதை கவனித்த ரஜினி, 'ஏன் இத்தனை கூட்டம், சத்தம்... இதுவரை இப்படி இருந்ததில்லையே,' என்று கூறினாராம்.

பாதுகாப்பை மீறி..

பாதுகாப்பை மீறி..

சில முறை இந்த பாதுகாப்புக் கெடுபிடிகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்துவிடத் துடித்திருக்கிறார்கள். ரஜினியுடன் சோனாக்ஷியும் இருக்கும் காட்சியைப் பார்க்க பலரும் ஆவலுடன் வந்தார்களாம்.

50 போலீஸ், 30 பவுன்சர்கள்

50 போலீஸ், 30 பவுன்சர்கள்

மைசூர் அரண்மனைப் பகுதியில் ரஜினி - சோனாக்ஷி காட்சிகள் எடுக்கப்பட்ட போது, 50 போலீசார் மற்றும் 30 தனியார் பவுன்சர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டார்களாம்.

இதான் முதல் முறை

இதான் முதல் முறை

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி சுரேஷ் குமாரசாமி கூறுகையில், 'இதுவரை ரஜினியின் எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இந்த அளவு காவலர்கள் நியமிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை," என்றார்.

சோனாக்ஷி இவ்ளோ பிரபலமா?

சோனாக்ஷி இவ்ளோ பிரபலமா?

மேலும் அவர் கூறுகையில், "ரஜினி சார் ஒரு சகாப்தம். அவருக்கான ரசிகர் கூட்டம் அனைவருக்கும் தெரியும். அவருடன் சோனாக்ஷியும் இருந்ததால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க வந்தனர். சோனாக்ஷி இவ்வளவு பிரபலமாக இருப்பார் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை," என்றார்.

ரோபோ சமயத்தில் கூட இப்படி இல்லை...

ரோபோ சமயத்தில் கூட இப்படி இல்லை...

முன்பு ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ பட ஷூட்டிங்கில் கூட இந்த அளவு போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டதில்லை, பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டதில்லை என்றும் சுரேஷ் குமாரசாமி தெரிவித்தார்.

ஆக, ஐஸ்வர்யா ராயை விட சோனாக்ஷிக்கு ரசிகர்களிடம் ஏக மவுசு என்கிறார்களோ..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X