ஒரே மூச்சில் 50 நாள் ஷூட்.. ஃபுல் ஃபார்மில் ரெடியான மணிரத்னம்!

Recommended Video

Ponniyin Selvan Movie: பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா- வீடியோ

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான முதல் கட்ட ஷூட்டிங் குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக தாய்லாந்தில் தொடர்ந்து 50 நாள் ஷூட்டிங் நடத்த போவதாகவும், அதற்காக நடிகர்கள் ஒரே அடியாக 50 நாள் கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

வரும் டிசம்பர் மாதம் பொன்னியின் செல்வன் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கல்கியின் நாவல்

கல்கியின் நாவல்

அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன், ராஜ ராஜ சோழனை மையப்படுத்தி புனைவு கதையாக உருவாக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ஷங்கர் என பலரும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால், இறுதியாக இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வனை உருவாக்கவுள்ளார்.

யார் யார்

யார் யார்

பொன்னியின் செல்வன் கதையில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும். அதற்காக கோலிவுட், பாலிவுட் என முன்னணி நடிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளனர். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க உள்ளதாகவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சக்ரவர்த்தியாக அமிதாப் பச்சனும் நடிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நடிகைகள் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி சாத்தியமானது

எப்படி சாத்தியமானது

பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க அதிக பட்ஜெட் தேவைப்படும். மணிரத்னத்துக்கு எப்படி இந்த படம் சாத்தியமானது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இடம்பெற்றிருக்கும். இந்த பிரம்மாண்ட படைப்பு சாத்தியமாக லைகா நிறுவனம் தான் காரணம். லைகா நிறுவனம் தயாரிப்பில் மல்டி ஸ்டாரர் படமாக உருவான செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றி தான், மணிரத்னத்தின் கனவு படத்தை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது.

120 நாள்

120 நாள்

மொத்தம் 120 நாட்களில் பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட காவியத்தை இயக்க மணிரத்னம் மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். அதன் முதல் அடியாக ஒரே மூச்சில் 50 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் அடுத்த மாதம் தாய்லாந்தில் தொடர்ந்து 50 நாள் ஷூட்டிங்கிற்காக கால் ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்காக பிரம்மாண்ட செட்களும் போடப்பட்டு வருகின்றதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X