யூடியூபுக்கே கிறுக்கு புடிக்க வைத்த பாகுபலி 2 ட்ரெய்லர்: 24 மணிநேரத்தில் 5 கோடி வியூஸ்
சென்னை: பாகுபலி 2 பட ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அதை 5 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியான 5 மணிநேரத்தில் அதை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக ரஜினியின் கபாலி பட டீஸரை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்தது தான் சாதனையாக இருந்ததது. அந்த சாதனையை பாகுபலி 2 ட்ரெய்லர் முறியடித்தது.
ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அதை 5 கோடி பேர் பார்த்துள்ளனர். ஒரு இந்திய படத்தின் ட்ரெய்லரை 24 மணிநேரத்திற்குள் 5 கோடி பேர் பார்த்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையை முறியடிக்க பல காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











