500 இந்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவம்.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் அடுத்த படம்.. மதராஸியுடன் மோதப்போகுது!
மும்பை: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இந்து மற்றும் இஸ்லாமியர்களின் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கெடுக்கும் விதமாக படங்களை இயக்குகிறர் என ஏகப்பட்ட சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால், மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அந்த படம் பெற பாஜக முழு ஒத்துழைப்பையும் வ்ழங்கியது.
2005ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான சாக்கலேட் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. ஹேட் ஸ்டோரி, ஸித் என கில்மா படங்களை இயக்க ஆரம்பித்த அவரை பெரிதாக யாருமே கண்டுக்கொள்ளவில்லை.

2019ம் ஆண்டு தி தஷ்கெண்ட் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய அவர், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் 2023ம் ஆண்டு இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில், அவருடைய அடுத்த படமான தி பெங்கால் ஃபைல்ஸ் படத்தின் மையக்கருவை ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட இந்து பண்டிதர்கள்: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக பகை உள்ளது. பாகிஸ்தானை தனி நாடாக பிரித்து சுதந்திரம் கொடுத்த பின்னரும், காஷ்மீருக்காக போராட்டம், தீவிரவாதம் என தொடர்ந்து எல்லை மீறி நடைபெறும் அத்துமீறல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், காஷ்மீரில் உள்ள இந்து பண்டிதர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கதையை காஷ்மீர் ஃபைல்ஸ் எனும் பெயரில் எடுத்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. அந்த படத்தில் லீடு ரோலில் அனுபம் கெர் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி நடித்திருந்தனர்.
தி வாக்சின் வார்: கொரோனாவில் இருந்து இந்தியாவை எப்படி பாஜக அரசு மீட்டது என்கிற கதையை மையமாக வைத்து தி வாக்சின் வார் எனும் படத்தை அடுத்ததாக விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கினார். ஆனால், அந்த படத்துக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், தி பெங்கால் ஃபைல்ஸ் படத்தை இயக்கி வெளியிட காத்திருக்கிறார்.
500 இந்தியர்களை கொன்ற சம்பவம்: பஞ்சு மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 500 ஒரியாகாரர்களை பார்ட்டிஷனுக்காக அடித்து துன்புறுத்தி எரித்துக் கொன்ற சம்பவத்தை இந்தியாவே மறந்திருக்கும். பாடப் புத்தகங்களில் இருந்து அழித்துவிட்டனர். இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் செய்த அந்த கொடுமையான செயலை நான் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டேன். தி கெசோரம் காட்டன் மில்லில் நடந்த பயங்கரத்தை உலகம் வரும் செப்டம்பர் 5ம் தேதி பார்க்கப் போகிறது என தனது The Bengal Files படத்தின் ரிலீஸ் தேதியையும் கதையையும் ரிவீல் செய்துள்ளார் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. இந்த படத்தின் மூலம் மீண்டும் பெரிய சர்ச்சை வெடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
மதராஸியுடன் மோதல்: மீண்டும் பாஜக இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்விகளும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கிலேயே தொடர்ந்து விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி செயல்படுகிறார் என எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதே சமயத்தில், மறைக்கப்பட்ட வரலாறுகளை திரையில் காட்டுவது என்ன தவறு என்றும் பல இயக்குநர்கள் இதுபோன்ற படங்களை எடுத்துக் கொண்டு தானே இருக்கின்றனர் என்கிற ஆதரவும் அவருக்கு கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படமும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











