கே.ஜி.எஃப் ராக்கி பாய் யஷ்க்கு பர்த்டே.. 5000 கிலோவில் கேக் வெட்டி மாஸ் காட்டிய ரசிகர்கள்!
Recommended Video
பெங்களூரு: கன்னட நடிகர் யஷ்-ன் 34வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மார்க்கெட்டை உலகளவுக்கு கொண்டு சென்றவர் யஷ். கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
யஷ் பிறந்தநாளை முன்னிட்டு 5000 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
ராக்கி பாய்
கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாயாக நடித்து கன்னட மொழி ரசிகர்களை மட்டுமின்றி, பாலிவுட், கோலிவுட், டோலிவுட் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த யஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
கே.ஜி.எஃப் 2வுக்கு வெயிட்டிங்
கே.ஜி.எஃப் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. அதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில், கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்.
5000 கிலோ கேக்
உலகிலேயே எந்தவொரு நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமான கேக் உருவாக்கப்பட்டு யஷ் ரசிகர்கள் வேற லெவலில் அவரது பிறந்தநாளை கொண்டாடி ஊருக்கே கேக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட ராக்கிங் ஸ்டார் யஷ், 5000 கிலோவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார்.
கின்னஸ் சாதனை
யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உருவாக்கிய 5000 கிலோ பிரம்மாண்ட கேக்குக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் அந்த சான்றிதழ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
புது போஸ்டர்
ராக்கிங் ஸ்டார் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் படக்குழு மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த செகண்ட் லுக் போஸ்டர் தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.
தளபதி ரசிகர்கள் வாழ்த்து
சென்னை டிரெண்டிங்கிலும் யஷ் பர்த்டே ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தளபதி விஜய் ரசிகர்கள், யஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தல ரசிகர்கள் வாழ்த்து
கன்னட நடிகர் யஷ் பிறந்தநாளை தல ரசிகர்களும் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications