Anu Hasan: இந்திரா பட ஹீரோயினை ஞாபகமிருக்கா.. 53 வயதில் என்னவொரு குரங்கு சேட்டை.. செம வீடியோ!
சென்னை: இளம் நடிகைகளே கொஞ்சம் ஆடினாலும் இடுப்பு பிடித்துக் கொள்கிறது என ஆப்பிள் ஜூஸ் கேட்கும் இந்த காலக்கட்டத்தில் 53 வயதிலும் சிறு பிள்ளையை போல பார்க்கில் குரங்கு சேட்டைகளை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஹாசன்.
ஹீரோயின், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தொகுப்பாளினி என பன்முகத்தன்மை கொண்ட அனுஹாசன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்து வரும் நிலையில், அவரது லேட்டஸ்ட் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திரா பட ஹீரோயின்: கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் மகளான அனுஹாசன் 1995ம் ஆண்டு சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற அச்சம் அச்சமில்லை பாடல் ஏகப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தவறாமல் இன்றளவும் ஒலித்து வருகின்றன.
அதன் பின்னர் ஹீரோயினாக நடிக்காமல் ஆளவந்தான் படத்தில் கமலுக்கு அம்மாவாகவே நடித்திருந்தார். மாதவனின் ரன், நளதமயந்தி, உள்ளிட்ட படங்களில் சிஸ்டர் ரோலில் நடிக்க ஆரம்பித்த அனுஹாசன், ஜெயம் ரவியின் தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காபி வித் அனு: காபி வித் டிடிக்கு முன்பாக காபி வித் அனு நிகழ்ச்சி தான் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்தது. சீரியல், டப்பிங் என படுபிஸியாக இருந்து வந்த அனுஹாசன் அவ்வப்போது சில படங்களில் எட்டிப் பார்த்து வருகிறார். உயிரே படத்தில் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு டப்பிங் பேசிய அனு ஹாசன் ஆளவந்தான் படத்தில் ரவீணா டாண்டனுக்கும் நளதமயந்தி படத்தில் கீது மோகன் தாஸுக்கும் டப்பிங் பேசியிருந்தார்.
53 வயதிலும் என்னவொரு ஃபிட்னஸ்: 53 வயதாகும் நடிகை அனுஹாசன் குழந்தைகள் விளையாடும் பார்க்கில் கம்பி மீது ஏறி சர்க்கஸ் காட்டும் காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன. யார் என்ன கலாய்த்தாலும் பரவாயில்லை, நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்தாலும், கவலைப்பட போவதில்லை எனக்கூறிய அனுஹாசன் சொன்ன அந்த மேட்டர் தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Muscle-அ பார்த்தீங்களா: இந்த வீடியோவை பார்த்து உங்களுக்கு டிஸ்கம்ஃபர்ட், டிஸ் அப்ரூவல் என எதுவாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, அந்த Muscle-அ பார்த்தீங்களா, இந்த வயதிலும் என்னோட உடம்பு ஃபிட்டாக இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என தெறிக்கவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











