twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவாவில் நடைபெற்று வரும் 53வது சர்வதேச திரைப்பட விழா.. இன்றுடன் நிறைவு!

    |

    கோவா : கோவாவில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கி இன்றைய தினம் நிறைவடையவுள்ளது.

    மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து இந்த 53வது சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.

    இந்த விழாவிற்கு ஒரு வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு அதில் நடிகை குஷ்பூ உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

    வாரிசு படத்தில் நான் நடிக்கிறேனா.. இது என்ன புதுக்கதையா இருக்கு.. குஷ்பூ பளீச்! வாரிசு படத்தில் நான் நடிக்கிறேனா.. இது என்ன புதுக்கதையா இருக்கு.. குஷ்பூ பளீச்!

    சர்வதேச திரைப்பட விழா

    சர்வதேச திரைப்பட விழா

    கோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கி இன்று வரை இந்த நிகழ்ச்சி 9 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நடத்தி வருகிறது. 53வது சர்வதேச திரைப்பட விழாவான இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    அனுராக் தாக்கூர் பெருமிதம்

    அனுராக் தாக்கூர் பெருமிதம்

    இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் சாராத படங்கள் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்தத் திரைப்பட விழா இந்திய அளவில் சிறப்பான பல திறமைகளை வெளியில் கொண்டுவர உதவியாக உள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    தொலைநோக்கு திட்டம் குறித்து அமைச்சர்

    தொலைநோக்கு திட்டம் குறித்து அமைச்சர்

    மேலும் சர்வதேச படங்களின் சூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதே தொலைநோக்காக திட்டமிடப்படும் பணி என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் முதல் முறையாக திரைப்படங்களுடன் சர்வதேச அளவில் வெளியாகி ஹிட்டடித்த ஓடிடி படங்கள் மற்றும் தொடர்களும் ஒளிபரப்பப்பட்டன. மேலும் இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    ஆசியாவின் பழமையான திரைப்பட விழா

    ஆசியாவின் பழமையான திரைப்பட விழா

    ஆசியாவின் மிகவும் பழமையான திரைப்பட விழாவாக இந்த விழா காணப்படுகிறது. இந்திய திரைப்பட பிரிவு, உலக சினிமா, அஞ்சலி, திரும்பிப் பார்த்தல் போன்ற பாரம்பரிய பிரிவுகளுடன் இந்த விழா நடந்துள்ளது. இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரபலங்கள் மற்றும் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் பிலிம் பஜாரில் அரங்குகளுடன், மல்டிமீடியா கண்காட்சி உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த விழாவில் இடம் பெற்றிருந்தன.

    திறமையான தேர்வுக்குழு

    திறமையான தேர்வுக்குழு

    இந்த விழாவில் பிரசூன் ஜோஷி, ரசூல் பூக்குட்டி, ஆர் பால்கி, கௌதமி தடிமல்லா, நிகில் மகாஜன், உஜ்வல் ஆனந்த், ப்ரணிதா சுபாஷ், கார்த்திக் பழனி உள்ளிட்ட இந்திய திரைப்படத்துறையின் புகழ்பெற்ற திறமையான 20 பேரை கொண்ட பிரம்மாண்டமான தேர்வுக்குழு திரைப்படங்கள் குறித்த முடிவுகளை தீர்மானித்துள்ளது. மேலும் விழாவிற்கான வழிகாட்டல் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நடிகை குஷ்பூ உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    உலகத்தரம் வாய்ந்த மல்டிபிளக்ஸ்

    உலகத்தரம் வாய்ந்த மல்டிபிளக்ஸ்

    விழாவில் பங்கேற்று பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், உலகத்தரம் வாய்ந்த மல்டிபிளக்ஸ் மற்றும் மாநாட்டு மையம் விரைவில் கோவாவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த புதிய அரங்கில் 2025ம் ஆண்டிற்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் பஙகேற்றனர்.

    ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் திரையிடல்

    ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் திரையிடல்

    இந்த விழாவில் சூர்யாவின் ஜெய் பீம், நடிகர் காளி வெங்கட்டின் குரங்கு பெடல் மற்றும் இயக்குநர் ரா வெங்கட்டின் கிடா உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. விழாவில் இந்தத் திரைப்படக்குழுவினர் மேடையில் பேசிய நிகழ்வும் நடைபெற்றது. இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமானோர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

    Read more about: goa கோவா
    English summary
    53rd International Film Festival of India going to conclude today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X