கைதான நடிகை சஞ்சனா போலீசாருடன் வாக்குவாதம்.. அவரிடம் கேட்க 54 கேள்விகள் ரெடி.. பதில் சொல்வாரா?

By

பெங்களூரு: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதை மாத்திரை

போதை மாத்திரை

திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்துள்ளார். இந்நிலையில், கன்னட சினிமாவில் நடக்கும் பார்ட்டிகளின் போது போதைப் பொருட்கள் பயன்பாடு இருப்பதாக கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இளம் நடிகர், நடிகைகள் அதைப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர் அதைப் பயன்படுத்தும் 15 நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்தார்.

ராகிணி திவேதி

ராகிணி திவேதி

இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணி திவேதியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

சஞ்சனா கல்ராணி

சஞ்சனா கல்ராணி

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் கன்னட நடிகையும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணியின் நண்பர், ராகுல் என்பவரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் சஞ்சனா கல்ராணி உள்பட போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளின் விவரங்களை தெரிவித்துள்ளார்.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

இந்நிலையில் சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அவர் வீட்டில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சஞ்சனாவை கைது செய்தனர். முன்னதாக விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அவர், லேப்டாப் பற்றும் 3 செல்போன்களை போலீசார் கேட்டபோது மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

முக்கிய ஆதாரங்கள்

முக்கிய ஆதாரங்கள்

பின்னர், உங்களுடன் நான் வரமுடியாது, நான் என் சொந்த காரில் விசாரணைக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். அதை ஏற்காத போலீசார், அவர்கள் கொண்டு வந்த காரிலேயே சஞ்சனாவை அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் இருந்து, இந்த வழக்குக்குத் தேவையான முக்கிய ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரிடம் கேட்க, 54 கேள்விகள் தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X