விவேக்கிற்கு அஞ்சலி… 59 மரக்கன்று நடும் விழா… ரம்யா பாண்டியன் மரங்களை நட்டார் !

சென்னை : உலக பூமி தினத்தையொட்டியும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

Recommended Video

நடிகர் விவேக் நினைவில் மாமரம் நட்டு வைத்த நடிகர் Nakkhul | RIPVivekh

திருவள்ளூர் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.

விவேக் அவர்களின் வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

இன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது இதை பற்றியும் திரைப்பட நகைச்சுவை நடிகராக இருந்த விவேக் இயற்கை எழில் மிகுந்த ஆர்வம் கொண்டு அனைவரையும் மரக்கன்று நடும் பணியை வலியுறுத்தியும் அவரே நேரடியாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்தற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக வளாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.

59 மரக்கன்றுகள்

59 மரக்கன்றுகள்

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் மற்றும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஆயுதப்படை காவலர்கள் மூலம் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த விழாவில் பேசிய, மாவட்ட எஸ்பி அரவிந்தன், உலக புவி தினத்தையொட்டியும் மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கின் நினைவாகவும் அவரது வயதை குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதே புகழுடன் இருப்பார்

அதே புகழுடன் இருப்பார்

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கூறும் போது, உலக பூமி தினம் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடுவது வழக்கம் இந்த ஆண்டு நடிகர் விவேக் நினைவாகவும் அவரது இயற்கை ஆர்வத்தை போற்றும் வகையிலும் 59 மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன திரைப்பட நடிகர் விவேக் மறைந்து விட்டார் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடில்லை அவரது கலை சேவையிலும் இதுபோன்ற இயற்கை ஆர்வத்திலும் அவர் என்றும் மறையாமல் அதே புகழுடன் இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

கனவை நிறைவேற்றுவோம்

கனவை நிறைவேற்றுவோம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம்வளர்ப்பு என அக்கறை காட்டிய விவேக் இதுவரை 33 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அவரது கனவை நிறைவேற்றும் விதமாக அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் மரக்கன்றுகளை நட்டு சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X