மீண்டும் பாலசந்தர்... 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’

சென்னை: புதிதாக தயாராகி வரும் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' படத்தில் 21 காமெடி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்களாம்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கே.பாலசந்தர் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறார். படத்திற்கு 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகனாக பரத் நடிக்கிறார்.

படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், மேல்படிப்பு பெற்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கூற இருக்கும் படம்தான் கதைக்களமாம்.

மேலும், இப்படத்தில் பரத்துடன் 21 நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்களாம். இது தொடர்பாக அப்படத்தின் டைரக்டர் எல்.ஜி.ரவிச்சந்திரன் கூறுகையில்...

முழு நீள நகைச்சுவை

முழு நீள நகைச்சுவை

‘காதலிக்க நேரமில்லை,' ‘உள்ளத்தை அள்ளித்தா' பாணியில் இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். அதனால்தான் 21 நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள்.

சித்த வைத்தியர் பரத்

சித்த வைத்தியர் பரத்

பரம்பரை பரம்பரையாக சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக பரத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நந்திதா கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

கன்னட நடிகர்

கன்னட நடிகர்

இங்கே வடிவேலுவைப்போல் கன்னட பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமாரை இந்த படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறோம்.

நீக்ரோ பாடகர்

நீக்ரோ பாடகர்

ஒரு நீக்ரோ பாடகருடன் சேர்ந்து கானா பாலா ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘555' படத்துக்கு இசையமைத்த சைமன், இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதாலயா...

நீண்ட நாட்களுக்கு பிறகு கவிதாலயா...

புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X