For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  31 வயசு வரை.. வெர்ஜினா இருந்தாதான்.. சவால் விட்ட ‘பிரேமம்’ இயக்குநர்.. டிரெண்டாகும் #5YearsOfPremam

  |

  திருவனந்தபுரம்: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா சபாஸ்டியன் என நச்சென்ற நடிகர்கள் தேர்வுடன் கடந்த 2015ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் பிரேமம்.

  சென்னை சத்யம் தியேட்டரில் 250 ஆண்டுகள் பிரேமம் படம் ஓடி படைத்த சாதனையால், தமிழில் அந்த படம் இதுவரை ரீமேக்கே செய்யப்படவில்லை.

  அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்!அடடா.. இப்படி ஆயிடுச்சே.. அந்தப்படம் இன்னைக்கு ரிலீஸாகலையாம்: சர்ச்சை இயக்குநரின் பிரேக்கிங் நியூஸ்!

  வெர்ஜினா இருந்தாதான்

  வெர்ஜினா இருந்தாதான்

  கிட்டத்தட்ட ஓராண்டு காலம் தியேட்டர்களில் ஓடிய பிரேமம் படத்தின் ரீமேக் உரிமையை இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் வாங்க மொய்த்த நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னை போலவே 31 வயது வரை வெர்ஜினாக இருக்கும் ஒருவனால் மட்டும் தான் இந்த படத்தை நல்லா எடுக்க முடியும் என சவால் விட்டு இருந்தார்.

  உண்மைதான்

  உண்மைதான்

  சிங்கிள்ஸ் பசங்களின் வலி தெரியாதவர்களால் அந்த படத்தை சிறப்பாக எடுக்க முடியாது என்ற அர்த்தத்தில் தான் அவர் சொல்லியிருந்தார். தன்னை விட சிறந்த இயக்குநர்கள் பெரிய பட்ஜெட்டில் நல்ல தரத்துடன் இந்த படத்தை எடுத்தாலும், பிரேமம் படத்தின் ஒரிஜினாலிட்டி வராது என அவர் சொன்னது உண்மை தான் என பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை பார்த்த ரசிகர்கள் உணர்ந்து கொண்டனர்.

  5 ஆண்டுகள்

  5 ஆண்டுகள்

  தமிழில் வெளியான சேரனின் ஆட்டோகிராஃப் படத்தை போல சின்ன வயசுல இருந்த தான் காதலிச்ச பெண்களை பற்றிய கதை தான் பிரேமம். பள்ளி மாணவியாக வரும் கூந்தல் அழகி அனுபமாவின் போர்ஷன், மலர் டீச்சராக வரும் சாய் பல்லவியின் போர்ஷன் மற்றும் கடைசியில், மடோனா சபாஸ்டியனின் டிவிஸ்ட் லவ் செட் ஆவது என காதலர்கள் கொண்டாட்டமாக இருந்த பிரேமம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆவதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இதயத்துடிப்பு

  இதயத்துடிப்பு

  நிவின் பாலி கடைசியாக மடோனா சபாஸ்டியனை திருமணம் செய்து கொள்ளும் போது, சுய நினைவுக்கு திரும்பும் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியின் ஆக்டிங் அந்த அளவுக்கு யதார்த்தமாகவும் சூப்பராகவும் இருக்கும். அந்த காட்சிகளை பதிவிட்டு, சில காதல் கதைகளுக்கு வார்த்தைகள் தேவையில்லை, இதயதுடிப்புகள் மட்டும் தான் என பதிவிட்டு வருகின்றனர்.

  இந்த படத்திற்கு பிறகுதான்

  இந்த படத்திற்கு பிறகுதான்

  இந்த லாக்டவுனில் ஃபகத் ஃபாஸிலின் டிரான்ஸ், பிருத்விராஜின் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல மலையாள படங்களை தமிழ் ரசிகர்களும் கண்டு ரசிக்க காரணமே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரேமம் படத்தால் தான் என பலரும் தற்போது கமெண்ட் போட்டு வருகின்றனர். வேறு மொழி படம் பார்க்கும் ஃபீலே இல்லாமல் இருந்தது தான் இந்த படம் மொழிகளை கடந்து ஜெயிக்க காரணம்.

  பிளாக் லவ்

  பிளாக் லவ்

  50 மில்லியன் வியூஸ் கடந்த மலரே பாடல் பலரது ரிங்டோனாக பல ஆண்டுகள் இருந்தது. பிரேமம் படத்தை பார்த்த பலரும் நிவின் பாலி மற்றும் சாய் பல்லவியின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று பாராட்டினர். கேரள இளைஞர்கள் முதல் தமிழக இளைஞர்கள் வரை கல்லூரிக்கு கருப்பு கலர் சட்டையையும், வேட்டியையும் அணிந்து செல்ல ஆரம்பித்தது எல்லாம் இந்த படத்தின் நினைவலைகளை என்றுமே நீங்க செய்யாது.

  English summary
  Nivin Pauly’s Premam completed its 5th year theater release on today. Premam fans all over South India remembering the popular Malar teacher and other characters in this epic love movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X