நடிகை சிம்ரன் பர்த்டே ஸ்பெஷல்.. தளபதி விஜய்யுடன் சிம்ரன் இணைந்து நடித்த அசத்தலான 6 படங்கள்!

சென்னை: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினான நடிகை சிம்ரனின் 44வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Simran's 44th Birthday | Vijay Simbran | Master | Lock Down

கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன், கடந்த ஆண்டு பேட்ட படத்தின் மூலம் ரஜினியுடனும் இணைந்து நடித்து விட்டார்.

சமீபத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விஜய்க்காக ஸ்பெஷல் டான்ஸ் ஆடிய சிம்ரனின் பிறந்த நாளை முன்னிட்டு, தளபதி விஜய்யுடன் சிம்ரன் நடித்த அசத்தலான 6 படங்கள் குறித்து இங்கே காண்போம்.

ஒன்ஸ் மோர்

ஒன்ஸ் மோர்

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், விஜய், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் படத்தில் தான் முதல் முறையாக தளபதி விஜய்யுடன் நடிகை சிம்ரன் ஜோடி போட்டு நடித்தார். 1997ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி வெளியான அந்த படம், தளபதி ரசிகர்களை இன்றளவும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

அதே ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படத்தில் விஜய்யும், சிம்ரனும் இணைந்து நடித்திருந்தனர். ஆனால், விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவில்லை. மாறாக அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். நடிகை கெளசல்யா விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும்

இயக்குநர் எழில் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரனுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. துள்ளாத மனமும் துள்ளும் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படத்தில் சிம்ரனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

பிரியமானவளே

பிரியமானவளே

துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான கையோடு 2000ம் ஆண்டில் மீண்டும் விஜய், சிம்ரன் ஜோடி இணைந்து நடித்த படம் தான் பிரியமானவளே. செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அக்ரிமென்ட் திருமணம் என்கிற புதுமையான கதைக்களம் தமிழ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

உதயா

உதயா

அழகம் பெருமாள் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான உதயா படத்தின் மூலம் மீண்டும் விஜய் - சிம்ரன் ஜோடி இணைந்து நடித்தனர். மேலும், உதயா படம் இவர்கள் இருவரும் ஜோடி போட்டு நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதயா படத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அந்த படம் சில ஆண்டுகள் கழித்தே வெளியாகின.

யூத்

யூத்

நடிகை சிம்ரன் பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருந்தாலும், நடிகர் விஜய் தான் ஆன் ஸ்க்ரீனில் சிம்ரனுக்கு சரியான ஜோடி என ரசிகர்கள் இன்றளவும் நினைத்து வருகின்றனர். 2002ம் ஆண்டு வெளியான யூத் படத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு செம குத்து டான்ஸ் போட்டிருப்பார். சிம்ரனின் டான்ஸ் விஜய்க்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X